உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டசபையில் பிரேமலதா விஜய பிரபாகரன் ஆசை

சட்டசபையில் பிரேமலதா விஜய பிரபாகரன் ஆசை

மதுரை: தே.மு.தி.க., இளைஞர் அணி செயலர் விஜய பிரபாகரன் அளித்த பேட்டி:தே.மு.தி.க.,வின் கூட்டணி நிலைப்பாடு குறித்து ஜன., 9ல் அறிவிப்போம். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தலைமையில், 2011 தேர்தலில் 29 எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபைக்கு சென்றனர். அதுபோல், வரும் தேர்தலில் பிரேமலதா தலைமையில் பல எம்.எல்.ஏ.,க்கள் செல்வர். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தேர்தலில் போட்டியிடுவது அவரது பலம். விஜயகாந்தின் பாணி வேறு, விஜய் பாணி வேறு. தி.மு.க., -- அ.தி.மு.க.,வோடு கூட்டணி வைப்பதற்கு, எங்களுக்கு எந்த சங்கடமும் கிடையாது. யாருடன் கூட்டணி வைத்தால் ஜெயிப்போம் என்பது பற்றி முடிவு எடுத்துள்ளோம்.கண்டிப்பாக, 2026ல் கூட்டணி ஆட்சிதான் அமையும். திராவிட சித்தாந்த கட்சிகள்தான், ஆட்சியில் இடம்பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !