உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரிமியர் லீக் கிரிக்கெட்: பெங்களூருவிடம் வீழ்ந்தது சென்னை

பிரிமியர் லீக் கிரிக்கெட்: பெங்களூருவிடம் வீழ்ந்தது சென்னை

சென்னை: பிரிமியர் லீக் போட்டியில் பேட்டிங்கில் சரிந்த சென்னை அணி 50 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பெங்களூரு அணி மீண்டும் வெற்றி பெற்றது.சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ், 'பவுலிங்' தேர்வு செய்தார்.பெங்களூரு அணிக்கு பில் சால்ட், விராத் கோலி ஜோடி துவக்கம் கொடுத்தது. கலீல் அகமது வீசிய முதல் ஓவரில் வரிசையாக 2 பவுண்டரி அடித்த சால்ட், அஷ்வின் வீசிய 2வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 45 ரன் சேர்த்த போது நுார் அகமது 'சுழலில்' சால்ட் (32) 'ஸ்டம்பிங்' ஆனார். ஜடேஜா வீசிய 7வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய தேவ்தத் படிக்கல் (27), அஷ்வின் 'சுழலில்' சிக்கினார்.பதிரானா வீசிய 11வது ஓவரில் வரிசையாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விரட்டிய கோலி (31), நுார் அகமது பந்தில் சரணடைந்தார். கலீல் அகமது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கேப்டன் ரஜத் படிதர், 30 பந்தில் அரைசதம் எட்டினார். பதிரானா பந்தில் படிதர் (51 ரன், 3 சிக்சர், 4 பவுண்டரி) ஆட்டமிழந்தார். சாம் கர்ரான் வீசிய கடைசி ஓவரில் 'ஹாட்ரிக்' சிக்சர் விளாசினார் டிம் டேவிட்.பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 196 ரன் எடுத்தது. டேவிட் (22) அவுட்டாகாமல் இருந்தார்.கடின இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு ஹேசல்வுட் தொல்லை தந்தார். இவரது 'வேகத்தில்' ராகுல் திரிபாதி (5), கேப்டன் ருதுராஜ் (0) வெளியேறினர். புவனேஷ்வர் பந்தில் தீபக் ஹூடா (4) அவுட்டானார். சாம் கர்ரான் (8) சோபிக்கவில்லை. பொறுப்பாக ஆடிய ரச்சின் ரவிந்திரா (41) ஓரளவு கைகொடுத்தார். சுயாஷ் சர்மா வீசிய 10வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த ஷிவம் துபே (19) ஆறுதல் தந்தார். அஷ்வின் (11) நிலைக்கவில்லை. சென்னை அணி 99 ரன்னுக்கு 7 விக்கெட்டை இழந்து தடுமாறியது.சுயாஷ் சர்மா பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த ஜடேஜா (25) ஆறுதல் தந்தார். ஹேசல்வுட் வீசிய 19வது ஓவரில் வரிசையாக 2 பவுண்டரி அடித்த தோனி, குர்ணால் பாண்ட்யா வீசிய கடைசி ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட் 146 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. தோனி (30) அவுட்டாகாமல் இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கத்தரிக்காய் வியாபாரி
மார் 28, 2025 23:56

இந்த தடவை சென்னையை உக்காரவைத்து நடு மண்டைல ஓட்டைபோட போகிறார்கள்.


புதிய வீடியோ