உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விபூதி, குங்குமம் முதல்வருக்கு அனுப்ப பூசாரிகள் தீர்மானம்

விபூதி, குங்குமம் முதல்வருக்கு அனுப்ப பூசாரிகள் தீர்மானம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பல்லடம்:''கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக முதல்வருக்கு, விபூதி மற்றும் குங்குமம் பிரசாதம் அனுப்பப்படும்,'' என்று கோவில் பூசாரிகள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.அதன் மாநில தலைவர் வாசு கூறியதாவது:தமிழகத்தில், தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல், பூசாரிகள் ஓய்வூதியம் பெறுவதற்கான வருமான உச்சவரம்பை, 1 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட, 17 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு உள்ளன.கோரிக்கைகள் அனைத்தும் கானல் நீராகவே உள்ளன. வரும், 15ம் தேதி நடைபெறவுள்ள அறநிலையத்துறை சார்ந்த சட்டசபை மானிய கோரிக்கையில், 17 அம்ச கோரிக்கைகளில், சில கோரிக்கைகளாவது நிறைவேறும் என்று எதிர்பார்க்கிறோம். இக்கோரிக்கைகளை நினைவுபடுத்தும் விதமாக, வரும் 14ம் தேதி, தமிழ் புத்தாண்டு அன்று, தமிழகம் முழுதும் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை செய்து, விபூதி, குங்குமம் பிரசாதங்களை, முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகளை வலியுறுத்தி, விபூதி, குங்குமம் பிரசாதங்களை முதல்வருக்கு அனுப்ப பூசாரிகள் தயாராக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Svs Yaadum oore
ஏப் 05, 2025 12:13

கோவில் பூசாரிகள் தாய் மொழி தமிழ்தான் ...இது கூட தெரியாத புரியாத படிக்காத விடியல் திராவிட உள்ளவரை விடியலுக்கு கொண்டாட்டம் ...


sankaranarayanan
ஏப் 05, 2025 10:13

நல்ல காரியும் விரைவில் விடாமல் அனைவரும் சேர்ந்து செய்யுங்கள் முதல்வரின் மனைவியும் சந்தோஷப்படுவார் நல்ல புத்தியை கொடுக்கட்டும்


என்னத்த சொல்ல
ஏப் 05, 2025 10:02

விபூதி, குங்குமத்திற்கு பதிலாக, பொங்கலும் புளியோதரியுமா அனுப்புங்க.


எவர்கிங்
ஏப் 05, 2025 09:59

விபூதி குங்குமத்துக்கு அவமதிக்கிற மாதிரி இருக்கு


T.sthivinayagam
ஏப் 05, 2025 09:50

குங்குமம் விபுதி பூசுவது திராவிட கலாச்சாரம் அதை திராவிட தலைவருக்கு அனுப்புவதில் தாய் மொழி எது என்று தெரியாதவர்கள் அரசியல் ஆக்க நினைப்பது வேடிக்கை என்று மக்கள் கூறுகிறார்கள் .


vivek
ஏப் 05, 2025 11:31

உன் வீட்டுக்கு அனுப்பவா என்று மக்கள் கேட்கிறார்கள்


Barakat Ali
ஏப் 05, 2025 09:19

இனி தேர்தல் வரை ஹிந்துக்களை பகைத்துக்கொள்ள மாட்டார் ...... ஹிந்துக்களே ..... உங்கள் கோபத்தை தேர்தலிலாவது காட்டுங்கள் .....


sridhar
ஏப் 05, 2025 08:57

…. பெற்ற தெங்கம்பழம் என்று பழமொழி நாற்பது பாடல் ஒன்று இருக்கு. விபூதி குங்குமம் அனுப்ப வேண்டாம்.


Svs Yaadum oore
ஏப் 05, 2025 07:34

சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் பூசாரிகளுக்கு வித்தியாசம் தெரியாமல் பேசக்கூடாது ....கோவில் பூசாரிகள் பற்றி விடியல் வாய் திறந்து பேச முடியாது ...பேசினால் என்ன நடக்கும் என்பது ரௌடி கூட்டத்திற்கு தெரியும் .... சிவாச்சாரியார்கள் திருப்பி கேள்வி கேட்க முடியாது என்பதால் வாய்க்கு வந்த படி பேசுவது .....திராவிட ரௌடிகள் மிரட்டி கோவில் கும்பாபிஷேக நேரம் கூட ரௌடிகளுக்கு தகுந்தபடி மாற்றுகிறார்கள் ....சாராய கம்பெனி நடத்தறவனை வோட்டு போட்டு மந்திரிகளாக மாற்றி விட்டு அடுத்தவனை கேள்விக்கு கேட்க என்ன தகுதி இருக்குது?? ..


raja
ஏப் 05, 2025 06:39

அட கூமுட்டைகளே ... அந்தம்மா எந்த கோயிலுக்கு வந்தாலும் எந்த பூஜாரியும் அர்ச்சனை பண்ணாதீங்க மதிக்காதீங்க முதல் மரியாதை செய்யாதீங்க என்று முடிவெடுங்கள்...அப்புறம் பாரு உன் கோரிக்கை நிறைவேறும்..தெய்வத்தின் காலில் விழுறீங்களோ இல்லையோ அந்தம்மா காலில் விழுரீன்க ....


Mani . V
ஏப் 05, 2025 05:18

அந்தப் குடும்பம் இவர்களை கேவலமாக விமர்சிக்கிறது. ஆனால், கேடுகெட்ட இவர்கள், அதை துடைத்துப் போட்டு விட்டு அவர்கள் கால்களில் விழுந்து கிடக்கிறார்கள். இதற்குப் பதில் நாண்டு கொண்டு சாகலாம்.


Svs Yaadum oore
ஏப் 05, 2025 07:24

பூசாரிகளை பற்றி எப்போது விடியல் பேசியது ??.....விபரம் தெரியாமல் பேசக்கூடாது எழுதக்கூடாது ..... இது கோவில் பூசாரிகள் .....


Svs Yaadum oore
ஏப் 05, 2025 07:27

எல்லாவற்றையும் சுத்தமாக துடைத்து போட்டு 200 ரூபாய் ஓசி பிரியாணிக்கு வோட்டு போடுபவர்கள் எப்போது நாண்டு கொள்வார்கள் ??....


புதிய வீடியோ