உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையில் இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்தார் மோடி

கோவையில் இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்தார் மோடி

கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து மதியம் விமானத்தில், பிரதமர் மோடி கோவை வந்தார். அவர், தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், கோவை கொடிசியா வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இயற்கை விவசாயிகள் அமைத்த அரங்குகள் மற்றும் கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார். இவ்விழாவிற்கு கவர்னர் ரவி தலைமை வகித்தார். தொடர்ந்து, 'பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி' திட்டத்தில், 9 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில், 21வது தவணையாக, ரூ.18 ஆயிரம் கோடி நிதியை பிரதமர் மோடி விடுவிக்கிறார்.

வரவேற்பு

முன்னதாக, கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் சாமிநாதன், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து கொடிசியா வளாகத்திற்கு காரில் வந்த பிரதமர் மோடிக்கு சாலையின் இருபுறமும், பாரம்பரிய கலைநிகழ்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.தினமலர் நேரலை ஒளிபரப்பை காண இங்கே கிளிக் செய்யுங்க


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தமிழன்
நவ 19, 2025 14:24

இயற்கை விவசாயத்திற்கு மிகப்பெரிய ஒத்துழைப்புகளை தரும் பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றிகள்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி