உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜன.19-ல் பிரதமர் மோடி பெங்களூரு வருகை

ஜன.19-ல் பிரதமர் மோடி பெங்களூரு வருகை

பெங்களூரு : பிரதமர் நரேந்திர மோடி, நாளை மறுதினம்(ஜன.,19) பெங்களூரு வருகிறார். இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், பேரணி நடத்தவும் வாய்ப்புள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, கேரளாவின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின், ஜனவரி 19ல் பெங்களூருக்கு வருகை தருகிறார். நகரின் ஏரோஸ்பேஸ் பொறியியல் கல்லுாரிக்கு பிரதமர் வருகிறார். இங்கு நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்.இதற்கு முன், சந்திரயான் வெற்றியை முன்னிட்டு, பெங்களூரின் இஸ்ரோ அலுவலகத்துக்கு பிரதமர் வருகை தந்தபோது, தொண்டர்கள், தலைவர்களை சந்திக்கவில்லை. அது அரசு நிகழ்ச்சியாக இருந்ததால், கட்சி சம்பந்தப்பட்ட தலைவர்களை சந்திப்பதை தவிர்த்தார்.ஜனவரி 19ல் பெங்களூரின் எச்.ஏ.எல்., விமான நிலையத்துக்கு வந்திறங்கும் பிரதமருக்கு, அமோக வரவேற்பு அளிக்க பா.ஜ., திட்டமிட்டுள்ளது.பெங்களூரு அல்லது சாம்ராஜ் நகரில், பெரிய அளவில் ஊர்வலம் நடத்த வேண்டும் என, பா.ஜ.,வினர் ஆலோசிக்கின்றனர். ஆனால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து, இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. நிகழ்ச்சிக்கு இரண்டே நாட்கள் இருப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது கஷ்டம் என்பதால், ஊர்வலத்துக்கு அனுமதி கிடைப்பது சந்தேகம் என, கூறப்படுகிறது.லோக்சபா தேர்தலுக்கு உற்சாகத்துடன் தயாராகும் பா.ஜ., தன் வெற்றிக்கு, பிரதமர் மோடியை அதிகமாக நம்பியுள்ளது. அவர் கர்நாடகாவில் அதிகமாக பிரசாரம் செய்தால், கட்சிக்கு யானை பலம் கிடைக்கும் என, மூத்த தலைவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.பிரதமர் வருகை காரணமாக, ஜனவரி 19ல் நடக்கவிருந்த பா.ஜ., செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமருக்கு வரவேற்பளிப்பது குறித்து, மாநில தலைவர் விஜயேந்திரா உட்பட, முக்கிய தலைவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்புசாமி
ஜன 17, 2024 00:11

விடியல் அரசு தெருக்களை சுத்தமா வெக்கலை.


Rajinikanth
ஜன 16, 2024 22:22

ஊர் ஊராக கோயில் கோயிலாக செல்லும் நம் பிரதமர் இதற்கெல்லாம் யார் செலவு செய்கிறார்கள்?


Sathyasekaren Sathyanarayanana
ஜன 17, 2024 08:24

அதற்கு கொத்தடிமை நீ ஏன் கவலை படுகிறாய்? அவர் எங்களது பிரியமான பிரதமர். கட்டுமரம், திருட்டு திராவிட கொள்ளைக்காரர்கள் போல் குடும்பத்தை மட்டுமே கவனிப்பவர் அல்ல. இன்னமும் திருட்டு திராவிட கொள்ளைக்காரர்களுக்கு வோட்டை போடும் முட்டாள் சென்னை மடையர்கள். வெட்கக்கேடு.


சாமிநாதன்,மன்னார்குடி
ஜன 17, 2024 11:07

விடியல் முதல்வர் தூபாய் டூர் போனாரே அதுக்கு யார் செலவு செஞ்சதுன்னு முதலில் கேளு அறிவாலய கொத்தடிமையே..


vaiko
ஜன 16, 2024 22:12

தேவை இல்லாத ஆணியை புடுங்க வருகின்றார். மக்கள் வெள்ளத்தில் தவித்த பொது வந்து பார்வை இடவில்லை. இன்னும் எந்த வித நிதி உதவியும் செய்யாவில்லை. இப்போது தண்ணீர் கொண்டு செல்ல வருகின்றார். இது அந்த ராமருக்கே பிடிக்காது.


Bhakt
ஜன 16, 2024 22:11

பப்புவ கூப்பிடலையா?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை