உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறை போலீசார் பாஸ்போர்ட் எடுக்க சிறப்பு முகாம்கள் அமைப்பு

சிறை போலீசார் பாஸ்போர்ட் எடுக்க சிறப்பு முகாம்கள் அமைப்பு

தமிழக சிறை காவலர்கள் அனைவரும் பாஸ்போர்ட் எடுத்து வைத்துக்கொள்ளுமாறு டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் உத்தரவிட்டுள்ளார். அதேசமயம் சிறைத்துறை துவங்கிய காலம் முதல், 'தமிழ்நாடு பிரிசன்' என்று இருந்த பெயர், 'தமிழ்நாடு ஜெயில்' என மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒன்பது மத்திய சிறைகள், மாவட்ட சிறைகள், பெண்கள் சிறைகள், திறந்தவெளி சிறைகள் என மொத்தம் 138 சிறைகள் உள்ளன. 6,000க்கும் மேற்பட்ட காவலர்கள் பணிபுரிகின்றனர்; 22,000த்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். துறை டி.ஜி.பி.,யாக மகேஸ்வர் தயாள் பொறுப்பேற்ற பிறகு, சிறைத்துறையை நவீனமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். கைதிகள் விபரம் உள்ளிட்ட அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.சிறை காவலர்களின் நல்வாழ்வு திட்டத்தின் கீழ், அனைவரும் பாஸ்போர்ட் எடுக்குமாறு டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார். அரசு ஊழியர் வெளிநாடு செல்ல, தன் துறை தலைவரிடம் அனுமதி பெறுவது கட்டாயம். சிறை காவலர்களை பொறுத்தவரை, விண்ணப்பிப்பதற்கே அனுமதி பெற வேண்டும். இதில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் பெரும்பாலானோர் பாஸ்போர்ட் எடுக்க ஆர்வம் காட்டுவதில்லை. இதை தவிர்க்க சிறப்பு முகாம் அமைத்து பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல, நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே, தமிழ்நாடு சிறையை ஆங்கிலத்தில், 'தமிழ்நாடு பிரிசன்' என்று அழைத்து வந்தனர்; இப்போது அந்த பெயர், தமிழ்நாடு ஜெயில் என மாற்றப்பட்டுள்ளது.'தமிழ்நாடு போலீஸ்' என்பதை குறிக்கும் வகையில், டி.என்.பி., என, போலீசார், 'பேட்ஜ்' அணிகின்றனர். அதுபோலவே, சிறைத் துறையினரும் அணிகின்றனர். இதனால், போலீசா, சிறை காவலரா என குழப்பம் ஏற்பட்டதால், சிறை காவலர்கள், டி.என்.ஜெ., என, 'பேட்ஜ்' அணியத் துவங்கி உள்ளனர். -- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ