உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உணவக சிறு குற்றங்களுக்கு சிறை ரத்து

உணவக சிறு குற்றங்களுக்கு சிறை ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : உணவகங்கள் நடத்துவோரின் சிறு குற்றங்களுக்கு, சிறை தண்டனை விதிப்பதை நீக்கி, அபராதம் மட்டும் விதிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தில் உணவு நிறுவனங்கள் சட்டம், 1958ல் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தில், சில வகை சிறு குற்றங்களுக்கு, சிறை தண்டனை வழங்க வழி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த சட்டத்தில் திருத்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான சட்ட திருத்த மசோதாவை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார். இதில், உணவகங்கள் தொடர்பான சிறு குற்றங்களுக்கு, 5,000 ரூபாயாக இருந்த அபராதத்தை, 10,000 ரூபாய் வரை உயர்த்த வழி செய்யப்பட்டுள்ளது. உணவு நிறுவன பணியாளர்களின் பணி நிபந்தனைகளை முறைப்படுத்தவும், உணவகம் தொடர்பான சிறு குற்றங்களுக்கு, சிறை தண்டனை விதிப்பதற்கு பதில், அபராதம் மட்டும் விதிக்கும் வகையில், சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக மசோதாவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

shakti
டிச 10, 2024 14:17

இனி மர்ம நபர்களுக்கு ஜாலிதான் ... எச்சில் துப்பினாலும், அழுகிய ஜோத்பூர் "ஆடு " பிரியாணி செஞ்சி போட்டாலும், ஊசியா ஷாவர்மா தின்று வாந்தி பேதி வந்தாலும் ஜஸ்ட் 10,000 கட்டி தப்பிச்சிடலாம்


Apposthalan samlin
டிச 10, 2024 11:49

திருநெல்வேலி யில் ஒரு உணவகம் தள்ளு வண்டியில் ஆரமித்து இப்பொழுது மலையில் பெரிய உணவகம் திறந்து உள்ளார்கள் குடும்பமாக எல்லாரும் ஒரு வெட் வெட்டினோம் அடுத்த நாள் காலையில் இருந்து மூணு நாள் கஷட பட்டோம் . இதை யாரிடம் சொல்லுவது அந்த கடைக்கு போவது இல்லை கூட்டம் இன்னும் நிரம்பி வழிகிறது


அப்பாத்துரை
டிச 10, 2024 09:06

கரப்பான் பூச்சியெல்லாம் சாம்பாரில் கெடந்தால் சகஜமா எடுத்துக்கணும். சாம்பாரில் மலைப்பாம்பு விழுந்தால்தான் நடவடிக்கை எடுக்கணும்.


Velusamy Dhanaraju
டிச 10, 2024 08:03

அப்படியே சிறு உணவகங்களில் சண்டைபோடும் உ பி ஸ்க்கும் சலுகை கிடைக்குமா


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 10, 2024 08:00

மாப்ளக்கி வேண்டியவங்க புச்சா தொழில் தொடங்கியிருக்காங்களா ????


Nandakumar Naidu.
டிச 10, 2024 07:47

தொற்றுநோய் உள்ளவன் தினமும் எச்சில் துப்பி மக்களுக்கு உணவுகள் வழங்கி, மாப்பிள்ளை நோயாளிகள் ஆக்கினால், அவனை மன்னித்து விடலாமா? என்ன ஒரு அர்த்தமற்ற தனமான மசோதா. தப்பு செய்தவன் உடனே தண்டனை அனுபவிக்க வேண்டும்.


visu
டிச 10, 2024 07:39

சரியான செயல்தான் இதுபோல சிறு குற்றங்களுக்கு புதிய குற்றவாளிகளுக்கு தனி சிறை வேண்டும்


ராமகிருஷ்ணன்
டிச 10, 2024 07:17

உணவக உரிமையாளர்களுக்கு பயம் போயிடும். மக்களுக்கு கேடு. திமுகவினர் நிறைய ஓட்டல்கள் நடத்துகிறார்கள் போலும்


rasaa
டிச 10, 2024 08:55

தி.மு.க.வினர் பிறர் நடத்தும் ஓட்டல்களில் மிரட்டி, அடித்து, குத்துச்சண்டை போட்டு பணம் கொடுக்காமல் சாப்பிட்டு செல்வார்களே தவிர, உழைத்து உண்ணமாட்டார்கள்.


சமீபத்திய செய்தி