உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் கிரெடிட் கார்டு வழங்க தனியார் வங்கிகள் திடீர் தயக்கம்: அரசு மசோதாவால் கலக்கம்

தமிழகத்தில் கிரெடிட் கார்டு வழங்க தனியார் வங்கிகள் திடீர் தயக்கம்: அரசு மசோதாவால் கலக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: தமிழக சட்டசபையில் 'கடன் வசூல் ஒழுங்கு மசோதா' நிறைவேற்றிய பின், 'தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு கிரெடிட் கார்டு வழங்க வேண்டாம்' என, வடமாநிலத்தைச் சேர்ந்த சில தனியார் வங்கிகள் முடிவு செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.மக்களின் தேவையை அறிந்திருக்கும் பணக்கடன் வழங்கும் பல நிறுவனங்கள், 'சிபில் ஸ்கோர் தேவையில்லை; நாங்கள் கடன் தருகிறோம்' என்று துவங்கி, குறிப்பிட்ட, 'லிங்க்' பயன்படுத்தினால், கடன் பெறுவது எளிது போன்ற பல்வேறு நடைமுறைகளில் பணம் கொடுத்து வருகின்றன.

கடன் சுமை

உடனடியாக பணம் கிடைக்கிறதே என்ற ஆவலில், பணத்தேவையுள்ள பலர் இதில் சிக்கி, கடன் சுமைக்கு ஆளாகின்றனர். கடன் கொடுத்த நிறுவனங்களுக்கு, குறிப்பிட்ட காலத்தில் பணம் செலுத்தவில்லை என்றால், வீட்டுக்கு வந்து மிரட்டுவது, அவமதிப்பது, அவர்கள் செல்லும் இடங்களில் பின்தொடர்வது, அவர்களுக்கு சொந்தமான அல்லது பயன்படுத்தும் சொத்துகளில் தலையிடுவது, மன உளைச்சல் தரும் வகையில் நடந்து கொள்வது போன்ற அத்துமீறும் செயல்களால், சிலர் தற்கொலை செய்த சம்பவங்கள் நடந்துள்ளன.சில மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் துவங்கி, 'கிரெடிட் கார்டு' வழங்கும் சில தனியார் வங்கிகள் வழங்கும் கடன் வரை, பலர் இதில் அகப்பட்டு, வெளியே வர முடியாமல் அவதிப்படுகின்றனர்.

சிறை தண்டனை

ஏராளமான புகார்கள் வந்ததால், தமிழக அரசு இதில் தலையிட்டது. 'கடன் வசூல் ஒழுங்கு சட்டம்' என்ற பெயரில் தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. கடன் வசூலிப்பதில் அத்துமீறல்கள் வலுக்கட்டாய நடவடிக்கைகளாக கருதப்பட்டு, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் அபராதம், தண்டனைக்குரிய குற்றங்களில் கைது செய்யப்படுவோர் ஜாமினில் வெளிவர முடியாது என, மசோதாவில் கடுமையான நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளன. இதை, பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ளனர்.ஆனால், கடன் வழங்கும் சிறு நிறுவனங்கள் மட்டுமின்றி, வடமாநிலங்களில் தலைமையிடம் வைத்துள்ள சில தனியார் வங்கிகளும் இந்த சட்டத்தால் கலங்கி போயிருப்பதாக தெரிகிறது. தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு, 'கிரெடிட் கார்டு' வழங்க வேண்டாம் என அவை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது. தங்கள் நிறுவன 'கிரெடிட் கார்டு' வைத்திருப்பவர்கள், தொகை நிலுவை வைத்திருந்தால், கெடுபிடி இல்லாமல் விரைந்து வசூலிக்கவும், அந்த வங்கிகள் அறிவுறுத்தி உள்ளதாக, வங்கி ஊழியர் வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அன்பே சிவம்
மே 29, 2025 10:38

1).வரவேற்கத்தக்க சட்டம். உண்மையில் வங்கிகள் கொள்ளை அடிப்பது மட்டும் அல்லாமல் ரவுடிகளாக செயல்படுவதை தடுக்கும் சட்டம். 2). எல்லா மாநிலங்களில் இந்த சட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும். 3). நகை கடன் புதிய நடைமுறை ரத்து செய்ய வேண்டும். 4). CIBIL சில திருத்தங்கள் செய்ய வேண்டும். ஒருவர் எல்லா கடனையை கட்டினால் லோன் திரும்ப கொடுக்கலாம். முன்பின் குறை இருந்தால் அந்த அந்த பிராஞ்ச் மேனேஜர் பார்த்து முடிவு எடுக்கலாம் என்று திருத்தம் செய்ய வேண்டும். 5). அதே போல் வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கிய கடன் தொகையை சிறிது கால தாமதம் ஆனாலும் கண்டிப்பாக செலுத்த வேண்டும். 6). இதை மத்திய அரசு செய்யாவிட்டால் கண்டிப்பாக 2029 தேர்தலில் இது தாக்கத்தை ஏற்படுத்தும். 7). கடைசியாக நல்ல practical நிதி அமைச்சர் நியமிக்கபட வேண்டும். 8) சும்மா argue பண்ணாமல் நடுத்தர மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பங்க் லோன் மற்றும் இதர நிதி சேவைகள் இருக்க வேண்டும். 9). Remember India நடுத்தர மக்கள் நிறைந்த நாடு என்பதை. 10). நடுத்தர மக்களிடம் சேமிப்பு என்பது தற்போது இல்லை என்பது நிதர்சனமான உண்மை and very dangerous fact என்பதை நிதி அமைச்சர் உணர்ந்து செயல்பட வேண்டும். 11). Income tax - 12 லட்சம் வரை உயர்தியை வரவேற்கிறோம். 12).அதே சமயம் வரி கட்டாமல் நிறைய retail ஆவதை தடுக்க வேண்டும் குறிப்பாக டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம்.


Kulandai kannan
மே 29, 2025 09:22

திமுக அரசின் எந்த நடவடிக்கையிலும் தொலைநோக்கு பார்வையே இல்லை. நேர்மையானவர்கள் பாதிக்கப்படுவார்கள்.


Kasimani Baskaran
மே 29, 2025 03:43

ஒருவகையில் 24% மூலம் பலரை நிரந்தர கடன்காரர்களாக விட்டு வைக்காமல் இருப்பார்கள். இல்லாத பணத்துக்கு கடன் வாங்கினால் நீண்ட கால அடிப்படையில் கடனாளியாகவே இருக்கவேண்டும்.


மீனவ நண்பன்
மே 29, 2025 03:00

தமிழக அரசே சுலப கடன் வழங்கும் திட்டம் தொடங்கி டாஸ்மாக் விற்பனையை தொய்வின்றி நடத்தலாம்