உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் புதைந்து கிடக்குது பரம ரகசியம்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் புதைந்து கிடக்குது பரம ரகசியம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடாமல் தி.மு.க.,வுக்கு விட்டுக்கொடுப்பதற்கு என்ன காரணம் என்பதை வெளியில் சொல்ல முடியாது என்று, செல்வப்பெருந்தகை கூறியிருப்பதை, 'நெட்டிசன்'கள் பலரும் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்.ஈரோடு கிழக்கு தொகுதி, காங்கிரஸ் கட்சி வசம் இருந்தது. முதலில் திருமகன் ஈ.வெ.ரா., வென்ற இந்த தொகுதியில், அவரது மறைவுக்கு பிறகு ஈ.வேகே.எஸ்., இளங்கோவன் வென்றார். இப்படி இரண்டு முறை வென்ற தொகுதியில், இந்த முறை காங்கிரஸ் போட்டியிடாமல், தி.மு.க., போட்டியிடுகிறது.இது பற்றி தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது: காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற ஈரோடு கிழக்கு தொகுதியை, தி.மு.க.,வுக்கு விட்டுக் கொடுத்தது தான் உண்மையான தோழமை. வரும் 2026 சட்டசபை தேர்தலில், காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை தி.மு.க., கொடுக்கும்; அதற்கான நம்பிக்கை எங்களிடம் உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டுக் கொடுத்திருக்கிறோம் என்றால், இன்னொரு உதவியையோ, உரிமையையோ காங்கிரசுக்கு தி.மு.க., கொடுக்கும்; அதை வெளியில் சொல்ல முடியாது.*டவுட் தனபாலு கருத்து:* அது சரி... ஒரு வருஷம் மட்டுமே எஞ்சியிருக்கிற எம்.எல்.ஏ., பதவிக்கு போட்டியிட, உங்க கட்சியில் யாரும் முன்வரலை... இதை வெளியில சொன்னா நல்லாயிருக்காதுன்னு, தி.மு.க.,வுக்கு விட்டு கொடுத்துட்டு, கீழே விழுந்தாலும் மீசையில மண் ஒட்டாத மாதிரி பேசுறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

VIDYASAGAR SHENOY
ஜன 15, 2025 20:18

பிட்சை பாத்திரம் ஏந்துபவர்கள் என்ன பெரிய விட்டுக்கொடுப்பு இதில் இருக்கு


Ramesh Sargam
ஜன 14, 2025 21:14

என்ன பரம ரகசியம்? கோடிகளில் பணம் கைமாறி இருக்கும். அதுதான் பரமரகசியமா..?


theruvasagan
ஜன 14, 2025 19:16

எண்ணிகிட்டு இருக்கோம். இன்னும் முடியல. முடிஞ்சதும் எவ்வளவுன்னு சொல்லுவோம். காரணங்களை பற்றி சொன்னேன்.


Raj
ஜன 14, 2025 17:29

இரண்டு முறை நின்று இருவரும் மரணம், இப்போ நிற்பதற்கு பயம். தி மு க நிற்பார்கள் காரணம் எமனுக்கே மரணபயம் கொடுப்பவர்கள்.


ஆரூர் ரங்
ஜன 14, 2025 15:36

வேற வழி? இப்படிக்கு பீட்டர் அல்போன்ஸ்தாசன்?


தமிழன்
ஜன 14, 2025 14:48

என்னது குப்புற விமுவதா.. /// திமுக தேர்தலில் குப்புற தான் விழுமா? தேர்தலில் திமுக வெற்றி பெறவில்லை என்றால் ... தேர்தல் செல்லாது என நீதி மன்றம் செல்வார்கள். தீர்ப்பு வருவதற்குள் அடுத்த தேர்தல் வந்து விடும்.


கல்யாணராமன்
ஜன 14, 2025 16:38

ஓர் ஆண்டே உள்ள பதவிக்காக காங்கிரஸ் கட்சியில் போட்டியிட யாரும் இல்லை என்று சொல்வதை திமுக வெற்றி பெறாது என்று சொன்னதாக டிவிஸ்ட் பண்ணுகிறாய், ஒழுங்காய் படி பரமா.


Kumar Kumzi
ஜன 14, 2025 13:51

இவன் திருட்டு திராவிஷ விடியாத விடியலின் கொத்தடிமை


ச. கோவிந்தராஜன்
ஜன 14, 2025 13:48

அத எப்படிங்க என் வாயால சொல்லுவ ??


Kasimani Baskaran
ஜன 14, 2025 13:35

சிக்கலில் மாட்டி சின்னாபின்னமாகி தீம்க்காவின் தயவில் நடமாடுகிறாரோ என்னவோ...


Raj
ஜன 14, 2025 13:27

எவ்வளவு கரண்ட்சி கை மாறியதோ. காங்கிரஸ் கோட்டை விற்று விட்டார் செ. பெ. அடிமை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை