உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சொத்து வரி உயர்வு: பழனிசாமி - நேரு மோதல்

சொத்து வரி உயர்வு: பழனிசாமி - நேரு மோதல்

சென்னை : 'திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வை கண்டித்து, தீர்மானம் நிறைவேற்ற மறுத்த மேயருக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அதேநேரம் சொத்து வரி உயர்வுக்கு பழனிசாமியே காரணம் என, அமைச்சர் நேரு குற்றம் சாட்டியுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hqr40iig&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பழனிசாமி:

திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி, குடிநீர் வரி, குப்பை வரி என அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. இதை கட்டாவிட்டால் அபராத வரி, வாடகை கட்டடங்களுக்கு புதிதாக ஜி.எஸ்.டி., வரி என, கடுமையான வரி உயர்வுகளை, தி.மு.க., அரசு சுமத்தி வருகிறது.இதை கண்டித்து, திருப்பூர் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். அதை, தி.மு.க., மேயர் ஏற்க மறுத்துள்ளார். மேலும், அனைத்து தீர்மானங்களையும், ஜனநாயக விரோதமாக நிறைவேற்றி, கூட்டத்தை முடித்துள்ளனர்.ஜனநாயக முறையில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நடத்திய போராட்டத்தை, காவல் துறையை ஏவி, தி.மு.க., அரசு கைது நடவடிக்கையில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது. திருப்பூர் மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட அனைத்து வரிகளையும் திரும்பப் பெற வேண்டும்.

அமைச்சர் நேரு:

திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில், சொத்து வரி திருத்த தீர்மானத்திற்கு எதிராக, போராட்ட நாடகத்தை அ.தி.மு.க., நடத்தி உள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் ஆண்டுதோறும், சொத்து வரியை உயர்த்த வேண்டும் என, மத்திய அரசு நிபந்தனை விதித்தபோது, அதை ஏற்றுக் கொண்டவர் பழனிசாமி. திடீரென மக்கள் மீது அக்கறை கொண்டவராக வேடம் போடுவது வேடிக்கை.தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தாவிட்டால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2021 - -26 வரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய மத்திய அரசின் மானியம் 4.36 லட்சம் கோடி ரூபாய் நிறுத்தி வைக்கப்படும், 'துாய்மை இந்தியா திட்டம், அம்ரித் 2.0 திட்டம்' ஆகியவற்றுக்கான நிதியும் ஒதுக்கப்படாது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் ஊழல் செய்து, உள்ளாட்சி அமைப்புகளை திவாலாக்கிய பழனிசாமி, அரசியல் ஆதாயத்திற்காகவும், தங்கள் கட்சியின் கலவர ஆய்வு களேபரங்களை மறைத்து, திசை திருப்ப, மக்கள் மீது அக்கறை உள்ளதை போல், நீலிக்கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறார்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Narayanan
நவ 29, 2024 10:47

நம் தலையெழுத்து நேரு போன்றவர்களை அமைச்சர்களாக பெற்றது. ஏதோ மத்திய அரசு கொண்டுவரும் அல்லது அமல்படுத்தச்சொல்லும் திட்டங்களை அப்படியே பின் பற்றி செயற்படுத்துவது போல் ஒரு பொய் பிரச்சாரத்தை மத்திய அரசின் மேல் போட்டு தப்பிப்பது இவர்கள் வாடிக்கை . உங்கள் அரசு நடக்கிறது நீங்கள் முடிவு எடுக்கும் இடத்தில் இருக்கும்போது நினைத்தை செய்யலாமே ? வீண் பழியை அடுத்தவர்மேல் சுமத்தாதீர்கள் .


venugopal s
நவ 29, 2024 10:37

இந்தப் பிரச்சினைக்கு மூல காரணம் மத்திய பாஜக அரசு என்பதை மட்டும் ஒப்புக் கொள்ளாமல் திமுக, அதிமுக அரசுகள் மீது வீண்பழி சுமத்த வந்து விடுவார்களே!


Ravi
நவ 29, 2024 09:44

சரி அதிமுக ஊழல் செய்தது எல்லோருக்கும் தெரியும் அவர்கள் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்து இருக்கலாமே இந்த மாடல் அரசு.. ஏன் எடுக்கவில்லை. அவர்கள் செய்த ஊழலில் திமுகவுக்கு பங்கு இருப்பதால் தானே


பேசும் தமிழன்
நவ 29, 2024 07:50

ஒவ்வொரு முறையும்... ஏதாவது ஒரு காரணத்தை கூறி... அவையை நடத்த விடாமல் தடுத்து... மக்களின் வரிபணத்தை வீணடிக்கும் இண்டி கூட்டணி ஆட்களை மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்.... வரும் தேர்தல்களில் இன்னும் இவர்களை விரட்டி அடிப்பார்கள்.


KRISHNAN R
நவ 29, 2024 07:48

மூன்று ஆண்டுகளில்..2 முறை உயர்த்தியுள்ளது


VENKATASUBRAMANIAN
நவ 29, 2024 06:47

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள் இந்த நாட்டிலே. கடவுள்தான் இவர்களிடமிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை