உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., சர்க்கார் சாரிம்மா மாடல் சர்க்காராக மாறி விட்டது; ஆர்ப்பாட்டத்தில் விஜய் ஆவேச பேச்சு!

தி.மு.க., சர்க்கார் சாரிம்மா மாடல் சர்க்காராக மாறி விட்டது; ஆர்ப்பாட்டத்தில் விஜய் ஆவேச பேச்சு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க., சர்கார், இப்பொழுது சாரிம்மா மாடல் சர்காராக மாறிருச்சு'' என சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசுகையில் த.வெ.க., தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்தார்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் போலீசார் தாக்கியதில், கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்ததற்கு நீதி கேட்டும், கடந்த நான்கு ஆண்டுகளில் போலீஸ் விசாரணையில், 24 பேர் உயிரிழந்தது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும், த.வெ.க., சார்பில், சென்னை சிவானந்தா சாலையில் இன்று (ஜூலை 13) காலை, 10:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க., தலைவரும் நடிகருமான விஜய் கருப்புச்சட்டை அணிந்து பங்கேற்றார். ''சாரி வேண்டாம்; நீதி வேண்டும்'' என குறிப்பிடப்பட்டு இருந்த பதாகைகளை விஜய் உட்பட த.வெ.க.,வினர் கையில் வைத்து இருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரும், ''சாரி வேண்டாம்; நீதி வேண்டும்'' என கோஷம் எழுப்பினர். முதல்முறையாக போராட்ட களத்தில் விஜய் பங்கேற்றார்.

சாரி சொன்னீர்களா?

ஆர்ப்பாட்டத்தில் விஜய் பேசியதாவது: திருப்புவனம் மடப்புரம் அஜித் குமார் சாதாரண, எளிய குடும்பத்தை சேர்ந்த இளைஞர். அந்த சாதாரண குடும்பத்திற்கு நடந்த கொடுமைக்கு சி.எம் (முதல்வர்) சாரி சொன்னார்கள். அது தப்பில்லை. இப்பொழுது அதன் உடன் இதனையும் சேர்த்து சி.எம்., சார் பண்ணிடுங்க. உங்களுடைய ஆட்சி காலத்தில், இதே மாதிரி போலீஸ் விசாரணையில் 24 பேர் இறந்து போய் இருக்கிறார்கள். அந்த 24 பேர் குடும்பத்திற்கும் நீங்கள் சாரி சொன்னீர்களா?

அவமானம்

தயவு செய்து சாரி சொல்லிருங்க. அஜித்குமார் குடும்பத்திற்கு நீங்க கொடுத்த நிவாரணம் மாதிரி, இந்த 24 பேர் குடும்பத்திற்கும் நீங்க நிவாரணம் கொடுப்பீங்களா? தயவு செய்து அந்த நிவாரணத்தையும் கொடுத்துடுங்க, சாத்தான் குளம் ஜெபராஜ், அந்த கேஸ் சி.பி.ஐ.,க்கு மாற்றிய போது, போலீசாருக்கு அவமானம் என்று சொன்னீர்கள், இன்றைக்கு நீங்க உத்தரவிட்டதற்கு, பெயர் என்னங்க சார். அதே தானே, அன்றைக்கு நீங்கள் சொன்னதும், இன்றைக்கு நடப்பதும், அதே சி.பி.ஐ., ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.,வின் கைபாவையாக தான் இருக்கிறது.

அட்ராசிட்டி?

ஏன் நீங்க அங்க போய் ஒளிந்து கொண்டு கொள்கிறீர்கள். த.வெ.க., சார்பாக நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம். அதனால் அந்த பயத்தில் மத்திய அரசின் ஆட்சிக்கு பின்னால், ஒளித்து கொள்வதற்கு காரணம். இன்னும் உங்கள் ஆட்சியில் எத்தனை அட்ராசிட்டி? அண்ணா பல்கலை கேசில் இருந்து, இன்னும் அஜித்குமார் மரண வழக்கு வரைக்கும், எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் தலையிட்டு அரசை கேள்வி கேட்டு கொண்டிருக்கிறது.

பதில் சாரிமா?

எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்க வேண்டும் என்றால் நீங்கள் எதற்கு சார்? உங்கள் ஆட்சி எதுக்கு சார்? நீங்கள் உட்காந்து இருக்கும் சி.எம்., பதவி எதற்கு சார்? எப்படி கேள்வி கேட்டாலும் உங்களிடம் இருந்து பதில் எந்த பதிலும் வரப்போவது இல்லை. பதில் இருந்தால் தானே வரும். உங்களிடம் இருந்து வரும் பதில் சாரிம்மா? தெரியாம நடந்துருச்சுமா, இல்லை என்றால் நடக்க கூடாதது நடந்துருச்சுமா, சாரிம்மா, அவ்வளவு தானே?

சாரிம்மா மாடல்

இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க., சர்கார், இப்பொழுது சாரிம்மா மாடல் சர்காராக மாறிருச்சு, இந்த அரசு ஆட்சியை விட்டு போவதற்குள், நீங்கள் செய்த தப்பிற்கு எல்லாம் பரிகாரமாக சட்டம் ஒழுங்கை சரி செய்தே ஆக வேண்டும். இல்லை என்றால் மக்களோடு மக்களாக ஒன்றாக நின்று, உங்களை சரி செய்ய வைப்போம். த.வெ.க., சார்பில் அதற்கான அத்தனை போராட்டங்களும் எடுத்து நடத்தப்படும். நன்றி. இவ்வாறு விஜய் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

angbu ganesh
ஜூலை 14, 2025 14:03

ரஜினி ஒரு துண்டு சீட்டு கூட இல்லாமல் அவ்ளோ அழகா ரசிக்கும் படி பேசறார் இவனுங்க துண்டு சீட்டு இல்லாம ஒரு மண்ணும் பேச துப்பு இல்ல கேட்ட தமிழனுங்கன்றானுங்க


SIVA
ஜூலை 13, 2025 19:45

எம்ஜிஆர் அவர்களை வேவு பார்க்க ஆர் எம் வீரப்பன் , ஜெயலலிதா அவர்களை வேவு பார்க்க சசிகலா , விஜய் அவர்களை வேவு பார்க்க ஆதவ் அர்ஜுனா .....


SIVA
ஜூலை 13, 2025 19:25

லாட்டரி தொழில் மற்றும் ஆன்லைன் ரம்மி இவற்றால் இதுவரை லட்சக்கணக்கான குடும்பங்கள் அனாதை ஆகி உள்ளன அதற்கு காரணம் லாட்டரி மார்ட்டின் அவரின் மருமகன் ஆதவ் அர்ஜுனா இன்று இந்த கட்சியின் முக்கிய பதவியில் உள்ளார்.இது கூட ஜோசப் விஜய்க்கு தெரியவில்லை என்றால் அவர் அரசியலுக்கு சரிப்பட்டு வரமாட்டார் , இது தெரிந்தும் அவரை கூட வைத்து கொண்டு மக்களுக்கு நல்லது செய்வேன் என்று சொன்னால் அதை நம்புவர் அரசியலுக்கு சரிப்பட்டு வரமாட்டார் ....


vivek
ஜூலை 13, 2025 17:58

பாவம் ஓவிய விஜய் எஸ்கேப்


T.sthivinayagam
ஜூலை 13, 2025 14:26

சாரியம்மா பற்றி பேச ஒரு ஆர்ப்பாட்டமா விஜய் நிலமையை இவ்வளவு பரிதாகமாக ஆக்கியது யார்


sridhar
ஜூலை 13, 2025 13:57

மக்களே , திமுக வோட்டு கேட்க வரும்போது சாரி சொல்லிடுங்க .


எஸ் எஸ்
ஜூலை 13, 2025 13:48

பேசுவது உணர்ச்சி இல்லாமல் ஒப்பிப்பது போல் உள்ளது. இவருக்கு என்ன தெரியும் என்று நாடாள ஆசைப்படுகிறார்?


R.MURALIKRISHNAN
ஜூலை 13, 2025 12:53

ஒரு சாக்கடை இனியொரு சாக்கடையை விமர்சிக்கிறது.


Raja k
ஜூலை 13, 2025 12:41

,அப்புறம் ஜோசப் விசய், சிபிஐ தான் ஆர் எஸ் எஸ், பாஜ கைபாவையாக மாறிவிட்டது, நீங்க யாரோட கைபாவை கிருத்துவ மிஸ்னரிகளின் கைபாவைதானே நீங்கள், தமிழ்நாட்டை வேட்டையாடி கூறுபோட வந்த கைகூலிதானே நீங்கள்


Ramesh Sargam
ஜூலை 13, 2025 12:37

சினிமாவில் சம்பாதித்தது இப்படி அரசியலில் போகவேண்டுமென்று விதி இருந்தால் யாரும் தடுக்கமுடியாது. அனுபவி ராஜா அனுபவி.


முக்கிய வீடியோ