மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு 220 புதிய ஸ்கூட்டர்கள்
04-Mar-2025
சென்னை; 'மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையரை மாற்ற வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய பார்வையற்றோர் இணையம் கூட்டமைப்பு சார்பில், சென்னையில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. காமராஜர் சாலையில் உள்ள, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு, கூட்டமைப்பின் பொதுச்செயலர் பாபு எழில் குணாளன் தலைமை வகித்தார். போராட்டத்தில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். திருச்சியில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவியின் மர்ம மரணம் குறித்து, துறை சார்பில் இதுவரை உரிய விசாரணையை ஆணையர் துவக்கவில்லை. விரைவில் விசாரணையை துவக்கி, தொடர்புடைய விடுதி காப்பாளரை பணி இடை நீக்கம் செய்ய வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளாக, 'புத்தகம் கட்டுநர் பயிற்சி' முடித்த, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணி வழங்கப்படாமல் உள்ளது, அதை விரைந்து வழங்க வேண்டும். பட்டப்படிப்பு படிக்க இயலாத பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, தொழில் பயிற்சி வழங்கி, அரசுப்பணி வழங்க வேண்டும்.அரசு உதவித்தொகையை, மாதம் 3,0-00 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தப் போராட்டம் நடந்தது.
04-Mar-2025