உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டம்: 700 ஆசிரியர்கள் கைது

சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டம்: 700 ஆசிரியர்கள் கைது

சென்னை:தமிழகத்தில், 2009 ஜூன் 1க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, 5,200 ரூபாய்; அதற்கு முன் நியமிக்கப்பட்டவர்களுக்கு, 8,370 ரூபாய் அடிப்படை சம்பளம் தரப்படுகிறது. ஒரே கல்வித்தகுதி, ஒரே பணிக்கு இருவேறுசம்பளத்தால், 20,000 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.சம்பள முரண்பாடுகளை களைய கோரி, நேற்று மூன்றாவது நாளாக, சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், 700க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க மாநில பொதுச்செயலர் ராபர்ட் கூறுகையில், ''சம வேலைக்கு சம ஊதியம் கோரி, மூன்று நாட்களாக போராடி வருகிறோம். பள்ளி கல்வி அமைச்சர், இயக்குனர் என யாரும் பேச்சு நடத்த முன்வரவில்லை.''இதேநிலை தொடர்ந்தால், மாநிலம் முழுதும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

duruvasar
பிப் 22, 2024 07:40

வரும் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திராவிட மாடலுக்கு ஓட்டு அளித்து வெற்றிபெற வைத்தால் அனைவருக்கும் அடிப்படை சம்பளம் ரூபாய் 10000 என அறிவித்து முதல் கையெழுத்தாக வரும். ஸ்டாலின் பொய் சொல்லமாட்டார். ஏனெனில் அவர் முத்துவேல் கருணாநிதியின் மகன்.


Ramesh Sargam
பிப் 22, 2024 07:19

ஒரே கல்வித்தகுதி, ஒரே பணி... ஓகே. ஆனால் அனுபவம், அதாவது experience வேறுபடலாம் இல்லையா?


Duruvesan
பிப் 22, 2024 07:12

எல்லோருக்கும் விடியல், ஓட்டு போட்ட அடிமைகளுக்கு நன்றி


Kasimani Baskaran
பிப் 22, 2024 05:37

நம்பி ஓட்டுப்போட்ட ஆசிரியர்களுக்கு மூன்று செங்குத்தான கோடுகளை போட்டு வஞ்சிக்கிறது மாடல் அரசு. இவர்களுக்கு ஓவராக சம்பளம் கொடுப்பதால் இனி தமிழக அரசின் பாண்டுகளை சம்பளமாகக்கொடுக்கலாம்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை