மணல் குவாரி திறந்தால் போராட்டம்
தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தின் இயற்கை வளங்கள சூறையாடப்படுகின்றன. புதிதாக 13 மணல் குவாரிகளை திறக்க, தி.மு.க., அரசு முடிவு செய்துள்ள செய்திகள் வந்துள்ளன. இயற்கையை பாதுகாக்க நினைப்பவர்கள் யாரும் மணல் குவாரிகள் திறப்பதை ஏற்க மாட்டார்கள்.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் மணல் குவாரிகள் மூடப்பட்டு, 'எம் சாண்ட்' பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. புதிதாக 13 மணல் குவாரிகளை திறக்கப்படுவதை, அ.தி.மு.க., ஒருபோதும் அனுமதிக்காது. மீறி திறக்கப்பட்டால், மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை, அ.தி.மு.க., நடத்தும். - ஜெயகுமார்,முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,