போலி வாக்காளர்களை சேர்க்க முடியாததால் எதிர்ப்பு
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த முறையில், இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை வாக்குரிமை உள்ளவர்கள் நீக்கப்பட்டு, புதிதாக வாக்காளர்கள் சேர்க்கப்படுவர். பீஹாரில், வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த, 'இண்டி' கூட்டணி, சீர்திருத்தத்திற்கு பின், எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தம் பணியை செய்வது, மாநில அரசு ஊழியர்கள். தி.மு.க., கடந்த காலங்களில், தங்கள் ஆதரவாளர்களை சேர்ப்பது, எதிர்க்கட்சி ஆதரவாளர்களை நீக்குவது போன்ற முறைகேடுகளை செய்தது. தற்போது, எஸ்.ஐ.ஆர்., முறையில், போலி வாக்காளர்களை சேர்க்க முடியாது. எனவே, தி.மு.க., எதிர்க்கிறது. எஸ்.சி., -எஸ்.டி., சிறுபான்மையினர் ஓட்டுகள் நீக்கப்படுவதாக, பொறுப்பற்ற முறையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். வழக்கம்போல், ஜாதி அடிப்படையிலான வன்முறையை, தி.மு.க., கையில் எடுத்துள்ளது. - நாராயணன் திருப்பதி தலைமை செய்தி தொடர்பாளர், தமிழக பா.ஜ.,