உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரு நபர் அலுவலகமாக மாறிய 150 சார் பதிவகங்கள்: பத்திரப்பதிவு பணி தாமதமாவதாக பொதுமக்கள் புகார்

ஒரு நபர் அலுவலகமாக மாறிய 150 சார் பதிவகங்கள்: பத்திரப்பதிவு பணி தாமதமாவதாக பொதுமக்கள் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பணியாளர் பற்றாக்குறை காரணமாக, 150 சார் பதிவாளர் அலுவலகங்கள், ஒரு நபர் மட்டுமே பணிபுரியும் அலுவலகமாக மாறி வருகின்றன. தமிழகத்தில், 585 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களுக்கு தினசரி, 1,000 பேருக்கு மேல் வந்து செல்கின்றனர். சொத்து பத்திரப்பதிவு மட்டுமல்லாது, நிறுவனங்கள் சார்ந்த ஆவண பதிவு பணிகளும் நடக்கின்றன. இதற்காக, இந்த அலுவலகங்களில் தலா ஒரு சார் பதிவாளர், இரண்டு உதவியாளர்கள், ஒரு அலுவலக உதவியாளர், ஒரு எழுத்தர், ஒரு காவலர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அதிக பத்திரங்கள் பதிவாகும் அலுவலகங்களில், இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படுவது வழக்கம். இது தவிர, கணினி உதவியாளர் என ஒருவர், ஒப்பந்த பணியில் நியமிக்கப்படுகிறார். ஆனால், பல இடங்களில் இந்த பணியிடம் முறையாக நிரப்பப்படவில்லை. இதனால், சார் பதிவாளர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களை, தினக்கூலி அடிப்படையில் பணியமர்த்தி கொள்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 150 அலுவலகங்களில், அரசு ஒப்புதல் அளித்த நிரந்தர பணியிடங்கள் அடிப்படையில் ஆட்கள் நியமிக்கப்படவில்லை. சார் பதிவாளர் அல்லது பொறுப்பு சார் பதிவாளராக செயல்படும் ஒரு உதவியாளர் மட்டுமே உள்ளனர். கணினி ஆப்பரேட்டர் ஒப்பந்த ஊதியத்தில் பணிபுரிகிறார். பிற தேவைகளுக்கு, சார் பதிவாளர்களே தனியாக ஆட்களை அமர்த்திக் கொள்கின்றனர். இதன் அடிப்படையில், 150 சார் பதிவகங்கள், ஒரு நபர் அலுவலகங்களாக செயல்படுகின்றன. இதனால், பத்திரப்பதிவு பணிகள் தாமதமாவதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இது குறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒரு நபர் சார் பதிவாளர்அலுவலகம்என்ற நிலையை மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போதைய சூழலில், வருவாய்குறைந்த பல ஊர்களில் பணிபுரிய சார்பதிவாளர்கள் விரும்பாததும், இதற்கு காரணமாக உள்ளது. இதேபோன்று பிற நிலை அலுவலர்கள், பணியாளர்களும் குறிப்பிட்ட சில ஊர்களை தவிர்ப்பது, ஒரு காரணமாக அமைந்துள்ளதுகாலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதில், பல இடங்களில் காலாவதியான பணியிடங்களை நிரப்ப, அரசின் அனுமதி பெற வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Barakat Ali
ஏப் 19, 2025 10:52

பத்திரப்பதிவு பணி பாதிக்கப்பட்டால் கூட துட்டு கொடுக்காம இருந்துட முடியுமா என்கிற அலட்சியம் ....


rama adhavan
ஏப் 19, 2025 07:08

லஞ்சம், புரோக்கர் அதிகம் உள்ள துறை இது.இந்த பத்திர பதிவு துறையை தனியார் வசம் ஒப்படைக்கலாம். அரசுக்கு வருமானம்குறையாது. மக்களுக்கு லஞ்சம் அளிப்பது குறையும்.


கோமாளி
ஏப் 19, 2025 06:58

பாதிக்கும் மேற்பட்ட சார்பதிவர்கள் லஞ்ச லாவன்ய வழக்குகளில் சஸ்பென்சன். மீதி உள்ளோருக்கு கட்டிங் தந்தால் பதவி இல்லையென்றால் கட்டாய விடுப்பு


Kasimani Baskaran
ஏப் 19, 2025 06:49

ஒப்பந்தப்பணி என்பது அரசே முன்னின்று செய்யும் ஒருவகை ஏமாற்றுவேலை. ஒரே படிப்பு தகுதி இருந்தும் வேறு வேறு வகையான சம்பளம் மற்றும் சலுகைகள். திராவிட சமத்துவம் விடுமுறைக்கா சென்று விட்டது?


சூரியா
ஏப் 19, 2025 06:46

கர்நாடகா போன்று, மற்றும் பாஸ்போர்ட் சேவை போன்று, பதிவுத்துறை ப் பணிகளை தனியாரிடம் கொடுக்கலாமே!


Venkateswaran Rajaram
ஏப் 19, 2025 06:13

, வருவாய்குறைந்த பல ஊர்களில் பணிபுரிய சார்பதிவாளர்கள் விரும்பாததும், இதற்கு காரணமாக உள்ளது. இதேபோன்று பிற நிலை அலுவலர்கள், பணியாளர்களும் குறிப்பிட்ட சில ஊர்களை தவிர்ப்பது........... அப்படி என்றால் லஞ்சம் வாங்குகிறோம் என்பதை அரசே ஒத்துக்கொண்டு அது கொள்கையாக செய்து கொண்டிருக்கிறது... லஞ்சம் வாங்குவதால் தானே இந்த ஊரில் வசூல் கம்மியாக கிடைக்கிறது அந்த ஊர் அதிகமாக கிடைக்கிறது எனக்கு போஸ்டிங் அந்த ஊரில் தான் வேண்டும் என்று கேட்கிறார்கள் அப்படி என்றால் இந்த லஞ்சப் பணம் எல்லாம் மேல் இடத்திற்கு செல்கிறது என்று தானே அர்த்தம் வசூல் எங்கு அதிகமாக அங்கு அதற்கேற்றார் போல் மேல் இடத்திற்கு பணத்தை கவனிக்க வேண்டியது உள்ளது.. ஆக அரசு பிள்ளையும் கிள்ளி விடுவோம் தொட்டிலையும் ஆட்டி விடுவோம் என்று சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.. இதில் சவுடால் பேச்சு வேறு எங்கேயாவது லஞ்சம் வாங்குகிறார்கள் என்று தெரிவித்தால் நாங்கள் உடனடி நடவடிக்கை எடுப்போம்.. என்ன நடவடிக்கை என்றால் அவரை இரண்டு நாட்கள் சஸ்பெண்ட் செய்து பிரமோஷன் செய்து அதிக லாபம் கிடைக்கும் இடத்திற்கு அனுப்பி விடுவார்கள் ஏனென்றால் அவர்தான் வசூல் வேட்டை செய்ய முடியும்...


சமீபத்திய செய்தி