உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடந்த ஆண்டு பிளஸ் 1ல் பெயிலான மாணவ - மாணவியருக்கு பொதுத்தேர்வு: பள்ளிக்கல்வி துறை

கடந்த ஆண்டு பிளஸ் 1ல் பெயிலான மாணவ - மாணவியருக்கு பொதுத்தேர்வு: பள்ளிக்கல்வி துறை

சென்னை: 'கடந்த கல்வியாண்டுகளில், 'பிளஸ் 1' பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியருக்கு, இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படும்' என, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர். தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகள், பிளஸ் 1 வகுப்புக்கு முக்கியத்துவம் தராமல், பெயரளவுக்கு பாடங்களை நடத்தி விட்டு, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு மாணவ, மாணவியரை தயார்படுத்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால், உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளில், மாணவ, மாணவியரால் சிறப்பான பங்களிப்பை வழங்க முடியவில்லை என்ற தகவல் வெளியானது. இதற்கு தீர்வு காண, பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு, 2017 - 18ம் கல்வியாண்டில் இருந்து, பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. கடந்த 2024 - 25ம் கல்வியாண்டில், பிளஸ் 1 பொதுத்தேர்வை, 8 லட்சத்து 7,098 மாணவ, மாணவியர் எழுதினர். துணைத்தேர்வு தேர்வு எழுதியவர்களில், 7.43 லட்சம் பேர், அதாவது, 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்; 63,866 பேர் தேர்ச்சி பெறவில்லை. இவர்களுக்கான துணைத்தேர்வு, கடந்த மாதம் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடந்தது. தேர்வு முடிவுகள், 31ல் வெளியாகின. தற்போது, தமிழக அரசு சார்பில், மாநில கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும். பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படாது. இந்த நடைமுறை இந்த கல்வியாண்டே அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கடந்த கல்வியாண்டு மற்றும் அதற்கு முந்தைய கல்வியாண்டுகளில், பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதியவர்களில், ஏராளமான மாணவ, மாணவியர் தேர்ச்சி பெறா மல் உள்ளனர். அவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்துமா என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது:

மாநில கல்விக் கொள்கை அடிப்படையில், இந்த கல்வியாண்டு முதல், 'பிளஸ் 1' மாணவ, மாணவியருக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது. அரசாணை இந்த அறிவிப்பு, 2025 - 26ம் கல்வியாண்டில், பிளஸ் 1 படிப்போருக்கு மட்டுமே பொருந்தும். கடந்த கல்வியாண்டுகளில், பிளஸ் 1 தேர்வெழுதி, தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியருக்கு, அவர்கள் தேர்ச்சி பெறும் வரை தேர்வு நடத்தப்படும். இது தொடர்பான விரிவான அறிவுறுத்தல்கள், பள்ளிக்கல்வி துறை சார்பில் அரசாணையாக வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Indhuindian
ஆக 11, 2025 11:43

இந்த ஆண்டுலேந்து பதினோராம் வகுப்புக்கு பொது தேர்வு கிடையாது. அப்படியென்றால் போன வருஷம் கோட் அடிச்சவங்களை ஏன் வஞ்சிக்கணும். பீஸை கட்டு பாஸ் ஆகு அதுதானே திராவிட மாடல். ஆல் பாஸ், கொரோன பாஸ் மாதிரி இதுவும் 2026 எலெக்ட்க்ஷன் பாஸாக இருக்கட்டுமே. அப்புறம் நாங்க சொன்னததையும் செஞ்சோம் சொல்லாததையும் செஞ்சோம்ம்னு உருட்டலாமே


அப்பாவி
ஆக 11, 2025 10:25

பெயிலானவங்களை உட்ருங்க. ஏதாவது தொழில் கத்துக்கிட்டு முன்னேறட்டும்.


D Natarajan
ஆக 11, 2025 08:37

ஆல் பாஸ் .


Chess Player
ஆக 11, 2025 07:43

எல்லோரையும் பாஸ் போடுங்கள். அப்போதுதான் அனைவரும் படித்து விட்டதாக கூறி நமது மாநில படிப்பில் முதலிடம் என்று கூறலாம். அந்த மாணவர்களால் வெளியில் போட்டி போடவே முடியாது. உடனே , எங்கள் மாநில படிப்பு நன்றாகத்தான் இருந்தது, மாணவர்கள் மேல் படிப்பில் தேர்ச்சி பெற வில்லை என்றால் தமிழர்களை பழி வாங்குகிறார்கள் என்று அடுத்த பொய் சொல்லலாம். மாணவர்கள் கதி அதோ கதி ஒரு புறம் குடி, சினிமா, நடிகர்கள் பின்னால் போகும் மாணவர்கள், சினிமா டிக்கெட் ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்கி கஷ்டப்பட்டு சம்பாதித்த காசை செலவழிக்கும் பைத்தியங்கள், எல்லா மாணவனும் பாஸ் என்று இது வேற எல்லா சினிமா ரிலீசும் தீபாவளி, பொங்கலுக்கு தான். கிறிஸ்துமஸ், ரம்ஜான் இல்ல. ஹிந்துக்கள் மட்டுமே குறி. உறுப்புட வழியே illa.


Sathyamurthy Pd
ஆக 11, 2025 07:11

No exams from this year Foolish Failed students to be promoted to +2 without examination. Will they do it?


புதிய வீடியோ