உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பன்றி இறக்குமதிக்கு முன்னுரிமை: இனப்பெருக்க கொள்கை வெளியீடு

பன்றி இறக்குமதிக்கு முன்னுரிமை: இனப்பெருக்க கொள்கை வெளியீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'இனப்பெருக்கம் உள்ளிட்ட தேவைகளுக்காக, வெளிநாடுகளில் இருந்து உயிருடன் பன்றிகளை இறக்குமதி செய்ய முன்னுரிமை அளிக்கப்படும்' என, தமிழக அரசின் பன்றி இனப்பெருக்க கொள்கையில் கூறப்பட்டுள்ளது. தேசிய அளவில் வழங்கப்பட்ட வழிகாட்டுதல் அடிப்படையில், கால்நடைகளுக்கான தனித்தனி இனப்பெருக்க கொள்கை வகுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழக அரசு 2021ல் அமைத்த வல்லுனர் குழு, பன்றிகள் இனப்பெருக்க வரைவு கொள்கையை உருவாக்கியது. கடந்த 2022ல் அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட இன்பெருக்க கொள்கை, தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:  இறைச்சி உற்பத்தியில் நம்பிக்கைக்கு உரிய ஆதாரமாக பன்றி வளர்ப்பு அமைந்து உள்ளது ஒருங்கிணைந்த அணுகுமுறை வாயிலாக, பன்றி வளர்ப்பை அதிகரிக்க முடியும்  சாதாரண பன்றிகளின் மரபணு திறனை மேம்படுத்த, இனக்கலப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் சாதாரண வகை பன்றி, காட்டுப்பன்றிக்கு பதிலாக, வேற்று இன பன்றிகளுடன் இணைந்துகலப்பினங்கள் உருவாக்கப்படும் அறிவியல் முறைகளை பின்பற்றி, குறைந்த செலவில் தீவனங்களை உருவாக்கி, விவசாயிகள் இதில் அதிகம் ஈடுபட வழி செய்யப்படும் செயற்கை கருவூட்டல் வாயிலாக, மேம்பட்ட வகை பன்றிகளின் இனப் பெருக்க திசுக்களை பெருக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் பெரிய வெள்ளை யாக் ஷையர், டூராக், லாண்ட்ரீஸ் போன்ற அயலின பன்றிகளின் இனப்பெருக்க திசுக்கள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் வெளிநாடுகளில் இருந்து உயிருள்ள பன்றிகளை இறக்குமதி செய்ய முன்னுரிமை அளிக்கப்படும் பன்றிகளின் உறைவிக்கப்பட்ட விந்தணு இறக்குமதி குறித்து ஆராயப்படும்  இனக்கலப்பு முறையில் தனி இன பன்றிகளை உருவாக்க வழிமுறைகள் கையாளப்படும்  பன்றி வளர்ப்புக்கு வங்கிக் கடன், மானியங்கள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Lion Drsekar
அக் 09, 2024 20:19

இதே போன்று வெளிநாட்டுக்கு சென்று தங்கள் திறமையின் வாயிலாக அந்த நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்கும் நம்மவர்களை மீண்டும் நம் நாட்டுக்கே அழைத்து நம் நாட்டின் உண்மையான வளர்ச்சிக்கு பாடுபட்டால் நன்றாக இருக்கும், இங்கு இப்போது தேவை மனித நேயம், மனித வளம், மனித இதயம் , மனிதர்கள் மட்டுமே , வந்தே மாதரம்


கழனிராஜன்
அக் 08, 2024 08:19

பிரியாணில சேக்கலாம். சூப்பரா இருக்கும். யாருக்கு தெரியப் போகுது


நிக்கோல்தாம்சன்
அக் 10, 2024 05:39

ஏற்கனவே வடகிழக்கு மாநிலங்களில் இந்த பன்றிக்கறிதான் பிரதானம் , அவர்கள் நெய்யே பயன்படுத்துவதில்லை , டால்டா என்று கூறி பன்றி கொழுப்பை தான் பயன்படுத்துகிறார்கள் சுவையிலும் வித்தியாசம் தெரியாது , யாரு கண்டா இங்கே சிறுத்தை தலைவன் ஆர்வமாய் போயி சாப்பிடும் அந்த ஹோட்டலிலும் வட இந்தியாவில் இருந்து தான் டால்டாவும் நெய்யும் வாங்குறாங்க போல


அப்பாவி
அக் 08, 2024 08:16

நல்ல சுவையா இருக்கும்.


வராகசாமி
அக் 08, 2024 07:26

ஆஹா... அமெரிக்கா போய் வந்ததுக்கு பலன் உடனேயே தெரியுது. யாருக்கு எவ்வளவு ஆதாயமோ?


Arul
அக் 08, 2024 07:19

உங்களை தேர்வு செய்த எங்களுக்கு நீங்க கொடுமை செய்ய பார்க்கிறிங்க இந்த விசயம் எங்க சமுகத்திற்கு எதிரானதுன்னு உங்களுக்கு தெரியாத ?


T. S. SRIRAMAN
அக் 08, 2024 06:46

பன்றி காய்ச்சல் என்கிற கடும் வியாதிக்கு விதை விதைக்கிறார்கள். தேவையா


சுந்தர்
அக் 08, 2024 06:28

ஹோட்டல்களில் கலந்துடப் போகாம பாத்துக்கணும்


Kasimani Baskaran
அக் 08, 2024 06:02

ஒரு குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு ....கண்டாலே பிடிக்காது. அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புண்டு. யாராவது கலப்படம் செய்து விட்டால் கதை கத்தலாகிவிடும்


நிக்கோல்தாம்சன்
அக் 08, 2024 05:49

அருமையான முன்னெடுப்பு, விவசாயிகளுக்கு ஒரு நல்ல வாய்ப்பு


Kumar Kumzi
அக் 08, 2024 05:13

ஹாஹா ஒட்டு பிச்சை போடுறே மூர்க்க காட்டேரிகளுக்கு வந்த சோதனை ஹீஹீஹீ


முக்கிய வீடியோ