உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "பிள்ளை செய்த குற்றம்; பெற்றோருக்கு வந்த சோதனை": ஜூன் 5ம் தேதி வரை போலீஸ் காவல்

"பிள்ளை செய்த குற்றம்; பெற்றோருக்கு வந்த சோதனை": ஜூன் 5ம் தேதி வரை போலீஸ் காவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: 'குடி போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தி, இரண்டு பேர் பலியான சம்பவம் தொடர்பாக, சிறுவனின் பெற்றோரை வரும் ஜூன் 5ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க புனே நீதிமன்றம் உத்தரவிட்டது.மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் கடந்த மே 19ம் தேதி, 'போர்ஷ்' என்ற விலையுயர்ந்த கார் சாலையில் தாறுமாறாகச் சென்று விபத்தை ஏற்படுத்தியது. இதில், பைக்கில் சென்ற இரண்டு சாப்ட்வேர் இன்ஜினியர்கள் பலியாகினர். பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபரின், 17 வயது மகன் அந்த காரை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து வழக்கில் இருந்து அந்தச் சிறுவனைக் காப்பாற்ற, அவருடைய குடும்பத்தினர் பல முயற்சிகளை செய்தது, போலீசை அதிர்ச்சி அடையச் செய்தது.அந்தச் சிறுவன் குடி போதையில் இருந்ததை உறுதிப்படுத்த, அங்குள்ள மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் சிறுவனின் ரத்தத்துக்கு பதிலாக கொடுக்கப்பட்ட ரத்த மாதிரி, சிறுவனின் தாயுடையது என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அந்தச் சிறுவனின் தாய் கைது செய்யப்பட்டார். ஆதாரங்கள் அழிக்க முயன்ற சிறுவனின் பெற்றோரை வரும் ஜூன் 5ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க புனே நீதிமன்றம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

D.Ambujavalli
ஜூன் 05, 2024 10:16

இன்னும் சில பல கோடிகளை வாரியிறைத்து நீதியை வணக்கப் பார்ப்பார்கள் Registration கூட ஆகாத காரை எப்படி ஓட்டினான்? பெற்றவர்கள் - தாத்தா உள்பட - செய்த fraud களுக்கு 7 / 10 வருஷம் உள்ளே தள்ளி நீதி நிலைநாட்டப்படுமா ?


Mani . V
ஜூன் 03, 2024 04:17

ஜூன் ஐந்து வரைதானே அதுக்கு ஏன் கவலை? அப்புறம் நீங்கள் பணக்கார வர்க்கம் என்றவுடன் கேஸெல்லாம் ஒன்றுமில்லாமல் போய் விடும். மீண்டும் உங்கள் பையன் ஜாலியாக, மதுபோதையில் பலர் மீது காரை ஏற்றி கொலை செய்து விளையாடலாம்.


ராமையா
ஜூன் 02, 2024 18:05

பிள்ளைகளை தறுதலைகளாக வளர்த்தது தான் குற்றம்.


Indhuindian
ஜூன் 02, 2024 16:46

பிள்ளை செய்த குற்றம் ஆனால் சோதனை பெற்றவர்களுக்கு. பெற்றவர்கள் செய்த குற்றம் பிள்ளயயை காப்பாற்ற ரத்த மாதிரி மாற்றி கொடுத்தது, லஞ்சம் கொடுத்து போலீசை திசை திருப்பியது, அப்பாவி கார் ஓட்டுனரையம் அவரோட குடும்பத்தையும் மிரட்டி தான்தான் காரை ஒட்டியதாக செய்தது -இதெல்லாம் குற்றம் இல்லையா? பிள்ளைக்கு என்ன இன்னும் பதினெட்டு வயது ஆகவில்லை மைனர் என்று கருதி வஷக்கு நடந்தால் பிள்ளை ஒரு சில ஆண்டுகளில் வெளியில் வரமுடியும் அனால் பெற்றோர்கள் கதி என்ன? ஒரு குற்றத்தை மறைக்க மேலும் மேலும் குற்றம் செய்து கொண்டு போனால் சட்டம் கையை கட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டு இருக்குமா?


Natesan Narayanan
ஜூன் 02, 2024 16:39

நிதியை தடுக்க உதவி செய்தல் மாபெரும் குற்றம் . 5 முதல் 7 ஆண்டு சீரை நீதிமன்றம் தரவேண்டும் .


Ramesh
ஜூன் 02, 2024 20:04

நீதி யை யாராலும் தடுக்க முடியாது. அது இறைவன் தீர்மானிப்பது


மேலும் செய்திகள்