உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்களை அவமதித்த பொன்முடிக்கு தண்டனை : இபிஎஸ்

மக்களை அவமதித்த பொன்முடிக்கு தண்டனை : இபிஎஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கள்ளக்குறிச்சி: '' மகக்களை அவமதித்து கேலி பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு ஆண்டவன் தண்டனை வழங்கிவிட்டார்,'' என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அமைக்கப்பட்ட அதிமுகவின் 126 அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சிக்கொடியை ஏற்றி வைத்து இபிஎஸ் பேசியதாவது: மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணத்தில் இதுவரை 60 லட்சம் பேரை சந்தித்தேன். அதிமுக ஆட்சியில் புதிய மாவட்டங்களையும் அரசு மருத்துவக் கல்லூரிகளையும் உருவாக்கினோம். அந்த வகையில் கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்ததோடு, உடனடியாக அரசு மருத்துவக் கல்லூரியையும் கொண்டு வந்தோம். இலவச பேருந்து பயணத்தை ஓசி பயணம் என முன்னாள் அமைச்சர் பொன்முடி கேலி செய்தது மக்களை அவமதிக்கும் செயல். பொன்முடிக்கு ஆண்டவன் தண்டனை வழங்கிவிட்டார்.ஏழை எளிய மக்களை இளக்காரமாக பார்க்கும் கட்சி திமுக தான்.அதிமுகவிற்கு ஜாதி மதம் கிடையாது, ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக. திமுகவிற்கு மக்கள் வெண்டிலேட்டர் வைத்து விட்டார்கள். 2026 தேர்தலோடு திமுக முடிந்து விடும். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை