உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொட்டு வைத்து; கயிறு கட்டக்கூடாது: ராஜா பேச்சால் தி.மு.க.,வில் கொந்தளிப்பு

பொட்டு வைத்து; கயிறு கட்டக்கூடாது: ராஜா பேச்சால் தி.மு.க.,வில் கொந்தளிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: சமீபத்தில் நீலகிரியில் தி.மு.க., மாணவரணி கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட தி.மு.க., துணைப் பொதுச்செயலர் ராஜா, '' தி.மு.க., வேட்டி கட்டும் போது, பொட்டு வைப்பது, கயிறு கட்டுவது போன்ற ஆன்மிக அடையாளங்கள் கூடாது,'' என பேசியிருந்தார். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க.,வினர் சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினரையே விமர்சிக்கும் வகையில் ராஜா பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் பதிவிட்டுள்ளனர். இது குறித்து, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த தி.மு.க., பிரமுகர் ஜெயராமன் முகநூலில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:கட்சியின் துணைப் பொதுச்செயலரான ராஜா, தி.மு.க.,வில் இருக்கிறாரா; இல்லை, தி.க.,வில் இருக்கிறாரா என்றே தெரியவில்லை. பெரும்பான்மையினத்தவரின் மத வழிபாடு உரிமைகளிலும், அவர்கள் வழியில் செயல்படும் தி.மு.க.,வினரின் ஆன்மிக உணர்வுகளையும் புண்படுத்துவது போல செயல்படுகிறார். 'யாருடைய மத வழிபாட்டு உரிமையிலும் தி.மு.க., குறுக்கிடாது' என முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். அவருடைய வீட்டிலும் வெளிப்படையாகவே கடவுளை வழிபடுகின்றனர். அமைச்சர்கள் சேகர்பாபு, நேரு ஆகியோரும் கோவில்களுக்குச் செல்வதோடு, ராஜா விருப்பத்துக்கு எதிராக கையில் கயிறு கட்டுகின்றனர். கட்சியில், யார் தி.மு.க., வேட்டி கட்ட வேண்டும் என்பதை ராஜா முடிவு செய்யக்கூடாது. தி.மு.க.,வினர் குறித்து கருத்து சொல்வதற்கு முன், தலைவர் ஸ்டாலின் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 76 )

Tamilnesan
ஏப் 10, 2025 11:14

சூடு, சொரணை கெட்ட இந்துக்கள் இருக்கும்வரை இதுபோன்ற பேச்சுக்கள் தொடரும்.


Naga Subramanian
ஏப் 08, 2025 07:46

இவர் ஒரு ஈனப் பிறவி. தனது இருப்பை தெரிவிக்க இந்த மாதிரிதான் செய்யவார். விட்டு தள்ளுங்கள்.


Sathyan
ஏப் 07, 2025 04:52

ஆனால் சிலுவை அணியலாம், குல்லா போடலாம், என்ன பேச்சு இது


sankaranarayanan
ஏப் 04, 2025 21:37

தி.மு.க., வேட்டி கட்டும் போது, பொட்டு வைப்பது, கயிறு கட்டுவது போன்ற ஆன்மிக அடையாளங்கள் கூடாது, என்று கூறும் திமுக துணைப் பொதுச்செயலர் ராஜா அவர்கள் தைரியம் இருந்தால் ஆண் மகனாக இருந்தால் முதல்வரின் மனைவி கோயில் கோயிலாக சென்று கும்பிட்டிட்டு வணங்கி பூஜை செய்வதும் வீட்டிலேயே பூஜை அலமாரி வைத்து கும்பிட்டு வருவதையும் தடுக்க சக்தி உள்ளதா மற்றவர்களை பற்றி அதிகம் கவலைப்படும் இந்த துரோகியை முதலில் கட்சியை விட்டே தூக்க வேண்டும்


Chandrasekaran Balasubramaniam
ஏப் 04, 2025 11:10

இவன் கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம். ஏனென்றால் இவர் கட்சியில் ஏதோ கெட்ட நிகழ்வு வரப்போகிறது. அதை மறைக்க இவ்வாறு கருத்து சொல்லி மக்களை திசை திருப்புகிறானுக


Ramesh Thiagarajan
ஏப் 04, 2025 08:16

திமுகவை திகவிற்கு அடமானம் வைக்கும் செயல்.திமுகவில் உள்ள இந்துக்கள், திகவையும் ராஜாவையும் பொறுத்துக்கொண்டு தான் காலம் தள்ள வேண்டிய நிலை. பரிதாபமாக இருக்கிறது.


Karuppiah
ஏப் 03, 2025 23:49

Dont ever vote for These kinds of .........


Karuppiah
ஏப் 03, 2025 23:42

தேர்ந்தெடுத்தால் இப்படி தான் பேசுவார். இனிமேலாவது ஒட்டு போடாதீர்கள்.


srinath lavvy
ஏப் 03, 2025 22:50

A spineless politician from the useless party. Let his party leaders wife react first.


Yasararafath
ஏப் 03, 2025 18:12

ஆ.ராசா தெரியாமல் பேசி இருப்பார்


rukmani
ஏப் 03, 2025 20:10

இல்லை. ஆணவ பேச்சு. இவர்கள் திருந்துவது பிரம்ம பிரயத்தனம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை