உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., ஆர்.எஸ்.பாரதிக்கு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கண்டனம்

தி.மு.க., ஆர்.எஸ்.பாரதிக்கு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கண்டனம்

சென்னை:''கவர்னரை 'கேஷுவல் லேபர்' என ஆர்.எஸ்.பாரதி கூறியது கண்டிக்கத்தக்கது'' என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். அவரது பேட்டி:அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில், புலன் விசாரணை முடிவதற்கு முன்பே, ஒரு நபர் தான் குற்றவாளி என, சொல்ல வேண்டிய அவசியம் என்ன? ஞானசேகரன் தி.மு.க.,வை சேர்ந்தவர் என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. இதில் உண்மை வெளிவர வேண்டும். ஒரு குற்றவாளியை பாதுகாக்க, தி.மு.க., எதற்காக குற்றவாளி கூண்டில் நிற்க வேண்டும்.அ.தி.மு.க., ஆட்சியில், பொங்கல் பண்டிகைக்கு, 5000 ரூபாய் கொடுக்க வேண்டும் என, அன்று எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் கூறினார். இன்று 130 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மட்டும் வழங்கப்பட்டுள்ளன.சட்டசபையில் நடக்கும் நிகழ்ச்சியை நேரலையில் ஒளிப்பரப்பவில்லை என்றால், உள்ளே என்ன நடக்கிறது என்பது தெரியாமல் போய் விடுமா? தி.மு.க., அரசின் அவலங்களை, மக்களிடம் இருந்து மறைக்க முடியாது.சட்டசபையில் கவர்னர் பெரிதாக தவறு ஒன்றும் செய்யவில்லை. தேசிய கீதம் ஒலிக்க வேண்டும் என, ஜனநாயக முறையில்தான் கேட்டுள்ளார். அவர் மீது அவதுாறு பரப்பி, தி.மு.க., பொய் பிரசாரம் செய்கிறது. கவர்னரை, 'கேஷுவல் லேபர்' என தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி கூறியது கண்டிக்கத்தக்கது.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை