உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை பரிசீலிக்கப்படும்: கீதா ஜீவன்

மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை பரிசீலிக்கப்படும்: கீதா ஜீவன்

சென்னை:''மாற்றுத்திறனாளிகள் கோரிக்கையை அரசு பரிசீலிக்கும்,'' என, அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்:எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கோரிக்கையை, அரசு பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும்.அமைச்சர் கீதா ஜீவன்: ஆசிரியர் பணிக்கான வேலை நிறுத்த போராட்டத்தை, 2012 முதல் நடத்தி வருகின்றனர். முதல்வர் ஆதரவு அளித்தார். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, தேர்வு இன்றி ஆசிரியர்களை நியமிக்கும் சாத்தியக்கூறு இல்லை. எனினும், அவர்களுக்காக அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை இரண்டுமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி நலத்துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.கடந்த நிதியாண்டில், 1,106 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.மேலும், 7.43 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு, மாத பராமரிப்பு தொகை கூடுதலாக 500 ரூபாய் வழங்கப்படுகிறது.பல்வேறு உதவித் தொகை இரு மடங்காக அதிகரித்து வழங்கப்படுகிறது. பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, நவீன வாசிப்பு கருவி வழங்கப்படுகிறது. வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிப்போரில், 2,751 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை உயர்த்த, முதல்வர் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறார். அவர்கள் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும்.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி