உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கேள்வி இண்டி கூட்டணிக்கு தலைமை தாங்க காங்.,கிற்கு தகுதி உள்ளதா? : திரிணமுல், கம்யூ., எதிர்ப்பை தொடங்கி விட்டன

கேள்வி இண்டி கூட்டணிக்கு தலைமை தாங்க காங்.,கிற்கு தகுதி உள்ளதா? : திரிணமுல், கம்யூ., எதிர்ப்பை தொடங்கி விட்டன

புதுடில்லி:பீஹார் தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளதால், 'இண்டி' கூட்டணிக்குதலைமையேற்கும் தகுதி, காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறதா என, கூட்டணியில் உள்ள கட்சிகள் தற்போதுகேள்வி கேட்க ஆரம்பித்துள்ளன. 'தலைமையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் வந்து விட்டது' என' திரிணமுல் காங்., வெளிப்படையாகவே விமர்சித்துள்ளதால்,'இண்டி' கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தியே தீர வேண்டும் என்ற நோக்கத்தில், பல்வேறு எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து, 'இண்டி' கூட்டணியை உருவாக்கியது. இந்த கூட்டணிக்கு, காங்கிரஸ் கட்சி தலைமை வகித்தது.8.71 சதவீதம்இந்நிலையில், பீஹார் சட்டசபை தேர்தலில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான, 'மஹாகட்பந்தன்' கூட்டணியில், காங்கிரஸ் மொத்தம் 61 இடங்களில் போட்டியிட்டது; வெறும் ஆறு தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. 8.71 சதவீத ஓட்டுகள் மட்டுமே கிடைத்துள்ளது. பீஹார் சட்டசபை தேர்தலில், காங்., சந்தித்த இந்த படுதோல்வி, 'இண்டி' கூட்டணியின் பிற கட்சிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதன் காரணமாக, 'இண்டி' கூட்டணி தலைமை பொறுப்பில் இருந்து காங்கிரசை மாற்ற வேண்டும் என்ற குரல்கள் எழத்துவங்கி உள்ளன.இதில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., முதல் கட்சியாக தலைமையை மாற்றக் கோரி போர்க்கொடி உயர்த்தி இருக்கிறது. 'பா.ஜ.,வின் வெற்றியை தடுக்க காங்., கட்சியால் முடியாது என்பது தெளிவாக தெரிந்து விட்டது. எனவே, பா.ஜ.,வை வீழ்த்தும் திறன் படைத்த வலுவான கட்சிக்கே கூட்டணியின் தலைமை பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்' என, திரிணமுல் காங்., எம்.பி., கல்யாண் பானர்ஜி வெளிப்படையாக கருத்து கூறியுள்ளார். மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்தி மம்தா பானர்ஜி வரலாறு படைத்ததால், 'இண்டி' கூட்டணிக்கு தலைமை ஏற்கும் தகுதி மம்தாவுக்கு மட்டுமே உள்ளதாக கல்யாண் பானர்ஜி சுட்டிக்காட்டியுள்ளார். 'இண்டி' கூட்டணிக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த புகைச்சலால், மற்ற சிறிய கட்சிகளும் குரலை உயர்த்த ஆரம்பித்துள்ளன. திரிணமுல் காங்., ஆம் ஆத்மி, சிவசேனா, சமாஜ்வாதி ஆகிய கட்சிகள், இனி வரும் காலங்களில் பிராந்திய கட்சிகளுக்கே முன்னுரிமை தர வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகின்றன. கடந்த 2024 லோக்சபா தேர்தலின்போதே, இந்த கட்சிகள் தனித்து இயங்க முயன்றது தெளிவாக தெரிந்தது. காங்கிரசுக்கு பதிலாக வெளிப்படையாகவே ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்து இருந்தன. அழுத்தம்தமிழகம், மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, கேரளா என அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல்கள் வரிசை கட்டியுள்ளன. அதற்கு அடுத்த ஆண்டான, 2027ல் கோவா, பஞ்சாப், உத்தரகண்ட், உத்தர பிரதேசம், ஹிமாச்சல் மற்றும் குஜராத் மாநிலங்களில் தேர்தல் நடக்கஉள்ளன. 'இதை கருத்தில் கொண்டு, பா.ஜ.,வின் வெற்றியை தடுக்க புதிய அணுகுமுறை அவசியம்' என, 'இண்டி' கூட்டணி கட்சிகள் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துஉள்ளன. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ., தலைவர் எம்.ஏ.,பேபி கூறுகையில், ''பீஹார் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து போட்டியிட விரும்பின. பா.ஜ.,வை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே இந்த ஒற்றுமை என்பதை நாட்டிற்கு புரியவைக்க முனைந்தன. ஆனால், அது நடக்கவில்லை. ''எனவே, ஒவ்வொரு கட்சிக்குள்ளும் தேர்தல் தோல்வி குறித்து தனித்தனியே அலசி ஆராய வேண்டும். அதன் பின், கூட்டணி கட்சிகள் ஒன்றாக கலந்து பேச வேண்டும்,'' என்றார். பீஹார் தேர்தலில், 'ஓட்டு திருட்டு' என்ற ராகுலின் பிரசாரம் பெரிதாக எடுபடவில்லை. 'அதற்கு ஆளும் கூட்டணி வகுத்த தரமான வியூகமே காரணம்' என்கிறார் ஜம்மு - காஷ்மீர் முதல்வரான ஒமர் அப்துல்லா. ''ராகுல் நடத்திய, 'வாக்காளர் அதிகார யாத்திரை'யில், மக்கள் கூட்டம் கூட்டமாக பங்கேற்றனர். இதை பார்த்து, தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று விடுவோம் என்ற மமதை காங்., கட்சிக்கு ஏற்பட்டது. இந்த யாத்திரையால் தொகுதி பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டதே தவிர, ஆக்கபூர்வமாக எந்த மாற்றமும் நிகழவில்லை. ''தேர்தல் முடிவுகளை உற்று பாருங்கள். ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை வாக்காளர்களிடம் இருந்ததாகவே தெரியவில்லை. அந்த அளவுக்கு நிதிஷ்குமார் அதை தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டார்,'' என்கிறார் ஒமர் அப்துல்லாபீஹாரில் ஏற்பட்ட இந்த படுதோல்வியால், உத்தர பிரதேசம் மற்றும் பிற ஹிந்தி பேசும் மாநிலங்களில், இனி காங்., கட்சியால் அதிக தொகுதிகளை கேட்டு பெற முடியாது. ஏனெனில் பீஹாரில், 61 தொகுதிகளை பிடிவாதமாக பெற்ற காங்., அதற்கேற்றபடி தேர்தலில் கடுமையாக உழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் தற்போது எழுந்துள்ளது. தவிர, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சீமாஞ்சல் பகுதியில் அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தனித் போட்டியிட்டு, ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் முஸ்லிம் வாக்காளர்கள், 'இண்டி' கூட்டணியை கண்டு கொள்ளவே இல்லை என்பதும் தெளிவாக தெரிகிறது. தற்போது இந்த விவகாரமும் 'இண்டி' கூட்டணிக்குள் உரசல்களை அதிகபடுத்தி இருக்கின்றன. பீஹார் தேர்தல் முடிவுகள் காங்., கட்சியின் திறமையின்மையை மட்டும் வெளிப்படுத்தவில்லை, கூட்டணிக்கான தலைமை, வியூகம், பிராந்திய தன்னாட்சி ஆகிய விவகாரங்களிலும் கூர்மையான விவாதங்களை எழுப்பி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

veeramani
நவ 18, 2025 10:15

அய்யா கனவான்களே திரு ராகுல் வரும் காலங்களிலும் பிரச்சாரம் செய்யட்டும் அவர் சென்ற இடமெல்லாம் NDA அபாரமாக வெற்றிபெற்றுள்ளது தயவுசெய்து ராகுலை வரும் தேர்தல்களிலும் பிரச்சாரம் செய்யச்சொல்லுங்கள் பிளீஸ்


Rathna
நவ 16, 2025 19:09

அதென்ன இப்படி சொல்லிடீங்க? அவர் பிரச்சாரம் செய்த இடம் எல்லாம் NDA கூட்டணி அதிரடி வெற்றி பெற்று உள்ளது. கடைசியாக பிஹாரி பெண்களின் கலாச்சார பண்டிகையான கணவனின் நன்மைக்கான இருக்கும் உண்ணா நோன்பு சட் பூஜா ஒரு நாடகம் என்று பேசி பெண்கள் வோட்டு ஒன்று கூட கிடைக்காமல் செய்துவிட்டார்.


பேசும் தமிழன்
நவ 16, 2025 23:36

அங்கே இருக்கும் இந்துக்கள் தமிழர்களை போல் இளிச்சவாயர்கள் இல்லை.... எவ்வளவு தான் கேவலமாக பேசினாலும் கேட்டு கொண்டு ஓட்டு போட !!!


M Ramachandran
நவ 16, 2025 17:56

ராகுலுக்கு பல நாடுகளில் அல்வா கிண்டும் வேலை தலைய்யக்கு மேலே இருக்கு.


M Ramachandran
நவ 16, 2025 17:51

மல்லிகார்ஜுன கார்கே விற்கு இது நல்ல தருணம் நழுவ விடாதீர்கள். தப்பித்து கர்னாடகாவிற்கு சென்று ஒரு குக்கிராமத்தில் பதுங்கி விடுங்கள்.


Rathna
நவ 17, 2025 12:26

பல ஆயிரம் கோடி சொத்தே விட்டுட்டு எப்படி கிராமத்திலே பதுங்குவது?


M Ramachandran
நவ 16, 2025 17:37

தி மு கா விற்கெ அந்த தகுதி இருக்கு.


M Ramachandran
நவ 16, 2025 17:33

சரியான கருத்து தான். அதனால் தான் பா ஜ அரசு ராகுலின் மீது ஒரு வழக்கும் போட வில்லை. துருப்பு சீட்டே ராகுலு தான். அவரின் சேவை பாஜா விற்கு தேவை.


Sundar R
நவ 16, 2025 14:34

"INDI" is a group of Alibaba Congress and 40 political parties. Their main motto is to show collective power of a garland made with several skeletons of political parties. Their job is to win elections for looting money and holding their territories. Misunderstanding which erupted after Bihar results, has caused friction between them leading to fractured relationship among them. If any person wants to tumble down the present Congress Leadership, to steal the leadership, the group will break into minor gangs. Important to note is that the fringe groups will not stay together. Some may break away. The big defeat in Bihar should be seen as an organisational defeat of "INDI" alliance because of the mistrust and cohesion from the Bihar voters and not the Congress alone. Defeat in Bihar elections has d factions among the parties of "INDI" alliance and led the weak leadership to a weakened relationship. Already, Arvind Kejriwal and Mamta Banerjee are two factions in "INDI" alliance. Electoral wins make the alliance stronger and the defeats causes resentment. The present Congress leader has to substantiate the reasons for what he has done and what the workers have done in Bihar election campaign, contents of Election Manifesto and immediately do the patch work and pasting work of the 40 members into the "INDI" alliance as a single entity. Otherwise, the rivals within the "INDI" alliance will use this as an opportunity to challenge the leadership and take control of the "INDI" alliance.


திகழ் ஓவியன், AJAX ONTARIO
நவ 16, 2025 14:16

எங்க தானை தலைவர் விடியளார்க்கு அந்த தகுதி உள்ளது. ஜஸ்ட் ஒரு கண்டன கூட்டம் நடத்தி காசா போறை நிறுத்தினார், ஒரு அறிக்கை விட்டு விமான நிலையத்திற்கு பஸ் அனுப்பி உக்ரைன் போர் நிறுத்தம் செய்து இந்திய மற்றும் பாகிஸ்தான் மாணவர்களை பாதுகாப்பாக மீட்டார். மாடல் ஆட்சி என்பது இந்தியாவிற்கு முன்நொடி...கனடா இவரின் ம‌திய உணவு திட்டத்தை காப்பி அடித்துள்ளனர். பல்லாயிரம் ஆண்டாக ஒழிக்க முடியாத ஆரியம், வடக்கன், ஹிந்தி, சமஸ்கிருதம், சனாதனம் ஆகியவற்றை ஒரே நொடியில் அழித்து ஒழித்தவர். ED, CBI இன்ன பிற புலனாய்வுத் துறையினர் கிட்டே கூட நெருங்க முடியாத இரும்பு தலைவர். இதை விட வேறு எந்த தகுதி வேண்டும்? மற்றும் 40 க்கு 40 ஜெயித்து வெறும் samosa, பஜ்ஜி காப்பி குடித்து கடந்த 20 வருடமாக டைம் பாஸ் செய்த புரட்சி...யார்கிட்ட...


Barakat Ali
நவ 16, 2025 16:47

துக்ளக்காருக்கு ஹிந்தி தெரியுமா ????


பேசும் தமிழன்
நவ 16, 2025 23:38

சுத்தம் விளங்கிடும்.


திகழ் ஓவியன், AJAX AND
நவ 16, 2025 14:06

மமதா வின் ஆணவம் அகங்காரம், திமிர், தான் என்ற ஆணவம், உலகில் தனக்கு மட்டுமே அனைத்தும் தெரியும் என்ற பாசாங்கு, அடுத்தவரை மதியாமை, வறட்டு அகங்காரம், ஈகோ, இன்னும் எவ்ளோ சொல்லி கொண்டு போகலாம்...அவ்ளோ திமிர். யாரும் தலைமை யாக ஏற்கவே மாட்டார்கள்...


NellaiBaskar
நவ 16, 2025 13:08

ராகுல் அவர்களின் சகோதரர் இங்கு உள்ளார் அவரிடம் கேளுங்கள் உரிய விளக்கம் எளிமையாக கூறுவார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை