வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பல்கலையில் பணிபுரிபவர்கள் கைவாடை இல்லாமல் இப்படி கசிவு ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆகையால் சரியாக விசாரித்து யார் அந்த கருப்பு ஆடு என்று கண்டுபிடித்து பணியைவிட்டு நீக்கவும்.
திருநெல்வேலி: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த இண்டஸ்ட்ரியல் லா என்ற பாடத்தின் தேர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் இன்று (மே 27) 'இண்டஸ்ட்ரியல் லா' பாடத்தின் தேர்வு நடக்க இருந்தது.வினாத்தாள் கசிந்ததாக கிடைத்த தகவலை அடுத்து தேர்வு கட்டுப்பாட்டாளர் தேர்வை தற்காலிகமாக ஒத்திவைத்து உத்தரவிட்டார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 106 கல்லூரிகளில் இந்த தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. தேர்வுக்காக மையங்களுக்கு அனுப்பப்பட்ட வினாத்தாள்களை திரும்பப்பெறும் பணி நடந்து வருகிறது. வினாத்தாள் கசிவு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
பல்கலையில் பணிபுரிபவர்கள் கைவாடை இல்லாமல் இப்படி கசிவு ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆகையால் சரியாக விசாரித்து யார் அந்த கருப்பு ஆடு என்று கண்டுபிடித்து பணியைவிட்டு நீக்கவும்.