உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லாட்டரி மார்ட்டின் நிறுவனத்தில் ரெய்டு; சிக்கியது ரூ.12 கோடி மட்டுமே!

லாட்டரி மார்ட்டின் நிறுவனத்தில் ரெய்டு; சிக்கியது ரூ.12 கோடி மட்டுமே!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய ரெய்டில், 12.41 கோடி ரூபாய் ரொக்கப்பணம் சிக்கியது.பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின், பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்துகிறார். இவருக்கு சொந்தமான வீடு, நிறுவனங்களில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறையினர் பல முறை சோதனை நடத்தியுள்ளனர்.கடந்த வாரத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். தமிழகம், மேற்கு வங்கம், கர்நாடகா, உத்தரபிரதேசம், மேகாலயா, பஞ்சாப் மாநிலங்களில், மார்ட்டின் தொடர்புடைய 22 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.இதில் 12.41 கோடி ரூபாய் ரொக்கப்பணம் சிக்கியது. ஏராளமான ஆவணங்கள், 6.42 கோடி ரூபாய் மதிப்புக்கு பிக்சட் டிபாசிட் ஆவணங்களும் சிக்கியுள்ளன. ஆவணங்கள் அடங்கிய டிஜிட்டல் கருவிகளும் சிக்கியுள்ளன என்று அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Srinivasan Krishnamoorthy
நவ 18, 2024 22:14

This cannnot be used by central government. frozen assets cannot be touched until completion of court hearing, and favourable judgement


Ms Mahadevan Mahadevan
நவ 18, 2024 21:48

இந்த மாதிரியான ஏழைகளை சுரண்டி ஏமாற்றி பிழைப்பவர்கள் ஒழிக்க பட வேண்டும்


Prakash Krishna Kumar
நவ 18, 2024 21:18

லாட்டரி மார்ட்டின் மிகப்பெரிய பிசினஸ்மேன் இந்த பணம் எல்லாம் அவருக்கு ஒன்றும் இல்லை


ஆரூர் ரங்
நவ 18, 2024 21:05

கருணாநிதியே ( கேரள அரசு போட்ட வழக்கில்) இவருக்காக அரசு தலைமை வழக்கறிஞரை அனுப்பி வாதாட ஏற்பாடு செய்தாராம். அவ்வளவு பவர்ஃபுல்.


sankaranarayanan
நவ 18, 2024 20:54

இது போன்று நாடு முழுவதும் ரைடு செய்து அகப்பட்ட மொத்த தொகை எவ்வளவு கொடிகள் என்று பகிரங்கமாக மக்களுக்கு எடுத்துரைக்கப்படுமா அவைகள் மத்தியூய அரசின் ஓர் ஆண்டுக்கான பட்ஜெட் தொகைக்காவது முழுவதும் பயப்படுத்தப்படுமா?


Oru Indiyan
நவ 18, 2024 20:19

திருமா ஸ்டாலின் சந்திப்பு இதற்கு தானா?


Sivagiri
நவ 18, 2024 20:06

அது சரி , அவிங்க என்ன பச்சைப்புள்ளையா , ? . . வில்லாதி வில்லன்கள் / சூராதி சூரன்கள் , இன்டர்நேஷனல் கிரிமினல்கள் ஆச்சே , அவ்வளவு சுலபமா கண்டுபுடிச்சிற முடியுமா என்ன ? . .


Ramesh Sargam
நவ 18, 2024 19:56

தினம் தினம் ரைடில் கிடைக்கும் பணத்தை ATM மையங்களில் சேர்த்தால், அந்த மையங்களில் பணத்தட்டுப்பாடு இருக்காது. இப்பொழுது பாருங்கள், No Cash, Sorry for the Inconvenience என்கிற போர்டு எல்லா மையங்களிலும் தொங்குவதை பார்த்திருப்பீர்கள்.


Sakthi,sivagangai
நவ 18, 2024 19:27

இந்த பணமெல்லாம் பிசாத்து அவனுகளுக்கு பாக்கெட் மணி...


சம்பா
நவ 18, 2024 19:22

டீசெலவு காசுதான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை