உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மணல் குவாரிகளில் சோதனை: ரூ.130 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை

மணல் குவாரிகளில் சோதனை: ரூ.130 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மணல் குவாரிகளில் நடத்திய சோதனையின் அடிப்படையில் ரூ.130 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவுக்கும் அதிகமாக, மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், அதில் கிடைத்த வருமானத்தை, சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாகவும் புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து, கடந்தாண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில், நீர்வளத் துறை அதிகாரிகள் மற்றும் மணல் குவாரி அதிபர்களின் வீடுகள் உள்ளிட்ட 34 இடங்களில் சோதனை நடத்தினர். இந்த நிலையில், மணல் குவாரிகளில் நடத்திய சோதனையின் அடிப்படையில் ரூ.130 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. ரூ.128.34 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், 209 எந்திரங்களும், ஒப்பந்ததாரர்களான சண்முகம் ராமச்சந்திரன், கருப்பையா ரத்தினம், பன்னீர் செல்வம் கரிகாலன் உள்ளிட்டோரின் 35 வங்கி கணக்குகளில் இருக்கும் ரூ.2.25 கோடி பணமும் முடக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை விளக்கமளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்