உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில் நிலையங்களில் குற்றங்கள் நடக்க அருகில் உள்ள மது கடைகளே காரணம்: ரயில்வே பாதுகாப்பு படை

ரயில் நிலையங்களில் குற்றங்கள் நடக்க அருகில் உள்ள மது கடைகளே காரணம்: ரயில்வே பாதுகாப்பு படை

சென்னை: ரயில் நிலையங்களில் அதிகரித்து வரும் திருட்டு, பாலியல் குற்றங்களுக்கு, அவற்றின் அருகில் உள்ள மதுக் கடைகளே காரணமாக இருப்பதாக, ரயில்வே பாதுகாப்பு படையினர் கூறுகின்றனர்.ரயில் பயணியரிடம் திருட்டு, பெண் பயணியருக்கு பாலியல் வன்கொடுமை, ரயில் மீது கல்வீச்சு, சிக்னல் சேதம் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. ரயில் நிலையங்களில் நடக்கும் குற்றங்களுக்கு, அருகில் உள்ள மதுக் கடைகளும் காரணமாக இருக்கின்றன.சென்னை கிண்டி, பழவந்தாங்கல், குரோம்பேட்டை, கொருக்குப்பேட்டை, அம்பத்துார், சைதாப்பேட்டை, ஊரப்பாக்கம், ஆவடி, திருவள்ளூர், திருவாலங்காடு, விண்ணமங்கலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, திண்டிவனம் உட்பட, 60க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் அருகில், டாஸ்மாக் கடைகள் உள்ளன. அந்த கடைகளில் மது குடித்து விட்டு, ரயில் நிலையங்களுக்குள் நுழையும் போதை ஆசாமிகள், பயணியரிடம் மொபைல் போன், நகை திருடுவது, பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போன்ற குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.இதுகுறித்து, பெண் பயணியர் சிலர் கூறியதாவது: ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பெண்களுக்கான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, இரவு 7:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை ரயில் நிலையங்களின் அருகில் அமர்ந்து மது குடிக்கின்றனர். மது போதையில் சிலர், பயணியரிடம் சில்மிஷம் செய்கின்றனர்; அருகில் வந்து ஆபாசமாக பேசுகின்றனர். ஏதாவது, ஒரு குற்ற சம்பவம் நடந்தால் மட்டுமே, அடுத்த ஒரு வாரத்துக்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் நடக்கின்றன. அதன்பின், போலீசையே அங்கு பார்க்க முடியாது. போதிய போலீசாரை நியமித்து, ரயில் நிலையங்களில் நிரந்தர கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதுபோல், உள்ளூர் போலீசாரையும், ரயில் நிலையங்களின் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது: ரயில் நிலையங்களுக்கு அருகே டாஸ்மாக் கடைகள் அதிகமாக இருப்பதால், ரயில்கள், ரயில் நிலையங்களில் குற்றங்கள் நடப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. ரயிலில் அடிபட்டு இறந்தவர்களில் பலர், போதை ஆசாமிகளாக தான் இருக்கின்றனர். போதையில் தண்டவாளத்தை கடக்கும்போது, ரயிலில் சிக்குகின்றனர்.அதேபோல், போதை தலைக்கேறியதும், ஓடும் ரயில் மீது கல் வீசுகின்றனர். மாதத்துக்கு 10 கல்வீச்சு சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்கிறோம். அதனால், ரயில் நிலையங்கள் அருகில் உள்ள, 40க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளின் பட்டியலை அளித்து, அவற்றை இடம் மாற்றம் செய்யுமாறு, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

c.mohanraj raj
பிப் 20, 2025 14:12

எந்த மந்திரியின் வீட்டு அருகில் ஆவது எம்எல்ஏ வீட்டின் அருகில் ஆவது தமிழ்நாட்டில் மது கடைகள் உள்ளனவா இதெல்லாம் நீதிமன்றத்திற்கு தெரியாதா ஏதேதோ வழக்கை வழிந்து எடுக்கும் நீதிமன்றங்கள் இதை எடுக்கக் கூடாதா கேட்டால் அது கொள்கை முடிவு நாங்கள் தலையிட முடியாது என்பார்கள்


அப்பாவி
பிப் 20, 2025 10:40

ரயில் நிலையங்களை வேற எடத்துக்கு மாத்தி வெச்சுக்கலாம். இங்கே சட்டம் ஒழுங்கைக் கட்டுப் படுத்த தெரியாதவங்க காரணம் ஆய்ந்து அறிவிப்பாரெம்பாவாய். ரயில்வே எல்லைக்குள் பூந்து குற்றம் செய்பவர்களை நீங்க தண்டிக்கக் கூடாதா? வித்தவுட்டில் வந்தால் அபராதத்திடு நாலு பிரம்படியும் குடுத்துப் பாருங்க.


ram
பிப் 20, 2025 10:29

அப்பா என்று சொன்னால் தான் சத்து பான கடையை இடம் மாத்த யோசிப்பார்கள், உடனடியாக மாத்தணும் என்றால் கட்டிங் கொடுக்கணும் லோக்கல் திருட்டு திமுக ஆட்களுக்கு.


JAYACHANDRAN RAMAKRISHNAN
பிப் 20, 2025 09:23

மதுக் கடை என்று சொல்லக் கூடாது மது அரங்கம் அல்லது மதுர அங்காடி என்று தூய தமிழில் சொல்ல வேண்டும். குடிகாரன் என்ற தவறு மது பிரியர்கள் என்பதே சரியான தமிழ் சொல் என மந்திரிமார்கள் சொல்லி இருக்கிறார்கள்.


GMM
பிப் 20, 2025 08:38

ரயில் நிலையம் உள் குடிபோதையில் செல்ல அனுமதிக்க கூடாது. உடன் கைது செய்ய வேண்டும். காலி இடத்தில் ரயில் நிர்வாகம் திறந்த வெளி சிறை உருவாக்க வேண்டும். தண்டுவாளம் கடந்தால் கைது நடவடிக்கை முறை வகுக்க வேண்டும். ரயில் நிலையம் சுற்றி குறிப்பிட்ட எல்லை வரை மாநில நிர்வாகம் மது கடை, விடுதிகள் கட்ட ரயில் நிர்வாக முன் அனுமதி பெற வேண்டும் என்பது விதி. ? அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் , தேசிய சாலைக்கும் பொருந்தும். தண்டிக்க ரயில் நீதிமன்றம் ஆரம்பிக்க வேண்டும். ரயில் பணிக்கு அனுப்ப படும் மாநில போலீஸ், ஸ்டேஷன் மாஸ்டர் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். சீனியருக்கு ரயிலில் 50 சதவீதம் கட்டணம் சலுகை உண்டு. ?


நிக்கோல்தாம்சன்
பிப் 20, 2025 06:09

எல்லா இடங்களிலும் குற்றம் நடக்க மதுவே காரணம் , அதோடு மன்னரின் மருமகள் நண்பன் கடத்தும் மெத்து சூடோ போன்றவற்றின் நடமாட்டமும் காரணம்


Kasimani Baskaran
பிப் 20, 2025 06:09

என்ன ஒரு வில்லத்தனமான கோட்பாடு... தமிழக அரசு சாராயக்கடை திறவாமல் வெறும் கடைகள் எப்படி காரணமாக இருக்கமுடியும்...


Bye Pass
பிப் 20, 2025 05:58

அப்பா காதில் விழுமா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை