உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  3 ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் ரயில்வே ஒப்புதல்

 3 ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் ரயில்வே ஒப்புதல்

சென்னை: சென்னை - கோவை உட்பட, மூன்று விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டு உள்ளது. ராமேஸ்வரம் - அயோத்தியா கன்டோன்மென்ட் விரைவு ரயில் புதுக்கோட்டையிலும், மேட்டுப்பாளையம் - துாத்துக்குடி விரைவு ரயில் போத்தனுாரிலும், சென்னை சென்ட்ரல் - கோவை விரைவு ரயில் திருவள்ளூரிலும் நின்று செல்ல ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ரயில்வே அமைச்சருக்கு, மத்திய இணை அமைச்சர் முருகன் நன்றி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் ரயில் பயணியர் சங்கமும் வரவேற்பு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை