உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக ரயில் திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதியை திருப்பி அனுப்பிய ரயில்வே

தமிழக ரயில் திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதியை திருப்பி அனுப்பிய ரயில்வே

சென்னை: தெற்கு ரயில்வேயில் நடக்கும், 10 ரயில் திட்டங்களுக்கு, மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி திருப்பி அனுப்பப்பட்டு உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் நடக்கும் ரயில்வே திட்டங்களுக்கு, மத்திய பட்ஜெட்டில், 6,626 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு மட்டும், 617 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுஉள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் நடக்கும், 10 ரயில் திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதியை மட்டும், பல்வேறு காரணங்களை முன்வைத்து, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் திருப்பி அனுப்பிஉள்ளார். குறிப்பாக, திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை; அத்திப்பட்டு - புதுார், ஈரோடு - பழனி; சென்னை - புதுச்சேரி - கடலுார்; காட்பாடி - விழுப்புரம்; ராமேஸ்வரம் - தனுஷ்கோடி; ஈரோடு - கரூர் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒதுக்கிய 600 கோடி ரூபாயை, 'சரண்டர்' செய்வதாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை என்றும், பெரும்பாலான திட்டங்கள் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு நிலையில் உள்ளன என்றும், அதற்கு காரணங்கள் கூறப்பட்டுள்ளன.

இதுகுறித்து, கன்னியா குமரி மாவட்ட ரயில் பயணியர் சங்க தலைவர் ஸ்ரீராம் கூறியதாவது:

புதிய ரயில் பாதை திட்டப்பணிக்கு ஒதுக்கிய தொகையை, சரண்டர் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே, கூடுதல் நிதியை பெற்று, புதிய ரயில் பாதை திட்டங்களை வேகப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தெற்கு ரயில்வேயின் டி.ஆர்.இ.யு., தொழிற்சங்க நிர்வாகி இளங்கோவன் கூறியதாவது:

தமிழகத்தில் நடக்கும் ரயில் திட்டங்களுக்கு, 35,000 கோடி ரூபாய் தேவை. குறிப்பாக, புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு மட்டும் 14,682 கோடி ரூபாய் தேவை. கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் தொகை ஒதுக்கவில்லை. நடப்பு பட்ஜெட்டில் தான் புதிய பாதை திட்டங்களுக்கு, 616 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த தொகையை ஆக்கப்பூர்வமான பணிக்கு பயன்படுத்தாமல், சரண்டர் செய்வது ஏற்புடையது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

subramanian
ஜூன் 01, 2025 23:26

புத்தியை கழட்டி வச்சிட்டு பதிவு போடுறீங்களா கோபால்?


venugopal s
ஜூன் 01, 2025 15:13

மத்திய பாஜக அரசு ரயில்வே திட்டங்களில் தமிழகத்தைப் புறக்கணிக்கிறது என்பது அப்பட்டமான உண்மை. அதையும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஏற்றுக் கொள்ளாமல் தமிழக அரசைக் குறை கூறுவது கேவலமான செயல்!


தமிழ்வேள்
ஜூன் 01, 2025 12:31

தமிழக அரசு நிலம் கையகப்படுத்தித் தராவிட்டால் ரயில்வே எப்படி பாதை அமைப்பு பணிகளை துவங்கும்? பேருந்து கும்பல் முட்டுக்கட்டை போடுவது வெளிப்படையாக தெரிகிறது.


Boomi nathan
ஜூன் 01, 2025 12:56

தமிழ்நாடு பஸ் நஷ்டம் அடையும் என்று ரயில்வேக்கு ஒத்துழைப்பு இல்லை .


Seyed Omer
ஜூன் 01, 2025 11:17

முன்னாள் அமைச்சர் லல்லு பிரசாத் அறிவித்த சென்னை கன்னியாகுமரிக்கு இரட்டை வழிப்பாதை ரயில் பாதை எப்போது முடிவு பெறும் மேலும் சென்னை கிழக்கு கடற்கரை சாலை மகாபலிபுரம் பாண்டிச்சேரி காரைக்கால் பட்டுக்கோட்டை கீழக்கரை ராமநாதபுரம் சாயல்குடி தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் திருசெந்தூர் உடன்குடி திசையன்விளை வழியாக கன்னியா குமரிக்கு எப்போது ரயில் பாதை அமைக்கப்படும் மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் வழியாக திருசெந்தூருக்கு ரயில் பாதை எப்போது அமைக்கப்படும் தென்னக ரயில்வே துறை மூலம் அதிக வருவாயை ஈட்டி தரும் தமிழகத்திற்கு துரோகம் ஓரவஞ்சனையுடன் செயல் படும் ஒன்றியரசு


Muthu Mohamed
ஜூன் 01, 2025 09:35

தமிழ்நாடு இழிச்சவாயனா


V Venkatachalam
ஜூன் 01, 2025 09:25

தமிழ் நாட்டு வரைபடத்தில் கோபாலபுரம் இருக்க கூடாது. திருட்டு கட்சி தீய முக வை அடியோடு ஒழித்தால் தான் இந்த மாதிரி விவகாரங்கள் இல்லாமல் போகும். நிலம் ஒதுக்கி கொடுப்பது முதல் லஞ்சப் பிரவாகம்.. ரயில்வே கேட்கிற இடமெல்லாம் திருட்டு தீயமுக ஆளுங்க லவட்டி தன் வசம் வச்சிருப்பானுங்க.


Bhaskaran
ஜூன் 01, 2025 09:18

உண்டியல் குலுக்கி பயலுவ தமிழக அரசுக்கு ஜால்ரா அடிப்பாங்க


Padmasridharan
ஜூன் 01, 2025 08:12

இவங்க ஆடுற ஆட்டம் ரோடெல்லாம் மேடும் பள்ளமுமாய் இருந்துகொண்டே இருக்கின்றது. நடப்பதற்கும், வண்டியில் சுத்தி_சுத்தி செல்வதற்கும்.. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு


Dharmavaan
ஜூன் 01, 2025 08:07

கமிஷன், கலெக்க்ஷன் கரப்ஷன் இருந்தால்தான் எந்த திட்டமும் தமிழ் நாட்டில் செயல்படும் ல்லையேல் இப்படித்தான் ஏன் திட்டங்களை முடிக்க முடியவில்லை காரணம் என்ன


Saai Sundharamurthy AVK
ஜூன் 01, 2025 08:03

மத்திய அரசின் எந்த திட்டங்களுக்கும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தடை போட்டு வருகிறது. அதற்கு உடந்தையாக பொறாமை பிடித்த உள்ளூர் அரசியல்வாதிகள் பலவிதமான நரித்தந்திரம் செய்கின்றனர்.


புதிய வீடியோ