உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டெல்டா, தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்

டெல்டா, தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:'தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டாவில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.அம்மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cam9p0bh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவுகிறது. வேலுார், சேலம், திருப்பத்துார், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று வெப்பநிலை 36.4 டிகிரி செல்ஷியஸ் முதல் 37.2 டிகிரி செல்ஷியஸ் வரை இருந்தது.தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இதேபோல் வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.இன்றும், நாளையும் தமிழகத்தில் வெப்பநிலை, 2 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கும்.சென்னை மற்றும் புறநகரில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஷியசை ஒட்டி இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தத்வமசி
மார் 16, 2025 09:00

பருவத்தில் பெய்யாத மழையும், பருவம் தாண்டி பொழியும் மழையும் வீண். இப்போது அறுவடை வீணாகும், அதிகம் மழையும் நல்லதல்ல, சிறிதே மழை பொழிந்தால் பூச்சிகள் அதிகமாகும். விதவிதமான வியாதிகளால் மக்கள் தொல்லை அடைவார்கள். இந்த மழை தேவையில்லை. இதனால் பெருமை இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை