தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் மழை பெய்யும்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும், லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் நேற்று மதியம் நிலவரப்படி, ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக ஓசூரில், 6 செ.மீ., மழையும், பரமக்குடியில் 4 செ.மீ., மழையும் பெய்துள்ளது. வாணியம்பாடி, சுத்தமல்லி அணை, விரிஞ்சிபுரம், ஆலங்காயம், மணலுார்பேட்டையில் தலா, 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். மே 13ம் தேதி, ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்துார் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை, 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் வரை உயரும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை, 38 முதல், 39 டிகிரி செல்ஷியசை ஒட்டியே இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.