உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தென் மாவட்டங்களில் மழை

 தென் மாவட்டங்களில் மழை

திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. ஈரப்பதம் மிக்க கிழக்கு திசை காற்று காரணமாக தென் மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. திருநெல்வேலி மாநகரப் பகுதியிலும், கூடங்குளம், ராதாபுரம் ஆத்தங்கரை பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளிலும், துாத்துக்குடி மாவட்டத்தில் பன்னம்பாறை சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும், தென்காசி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இடி மின்னலுடன் கோடை மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !