உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகம் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும்

தமிழகம் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக குறைந்து வருகிறது. மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு காணப்படுவதால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 11 வரை தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ., வேகத்திலும்; அவ்வப்போது 65 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். தெற்கு, மத்திய மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ., வேகத்திலும்; அவ்வப்போது 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

angbu ganesh
ஜூலை 06, 2024 10:10

modalula இவனுங்க அறிவிப்ப நிறுத்த சொல்லுங்க இவனுங்க சொன்னா அதுக்கு எதிர்மறயதன் நடக்குது மழையே நீ வாஆஆ


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை