வரும் 30 வரை மழை தொடரும்
சென்னை:சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை:பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதியில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில், இன்று மிதமான மழை பெய்யலாம்.வரும் 30 வரை பெரும்பாலான நாட்களில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இருப்பினும் சில பகுதிகளில் வறண்ட வானிலைக்கும் வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்.