உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கருணாநிதி வீட்டை சூழ்ந்த மழைநீர்

கருணாநிதி வீட்டை சூழ்ந்த மழைநீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டை வெள்ளநீர் சூழ்ந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல சாலைகள் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.முன்னாள் முதல்வர் கருணாநிதி வீடு அமைந்துள்ள கோபாலபுரம் பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், கருணாநிதி வீட்டையும் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது.கடந்த மாதம்(அக்.,15) கனமழை கொட்டித்தீர்த்த போதும் கருணாநிதி வீட்டை மழைநீர் சூழ்ந்தது. அப்போது வீடு முன்பு மணல் மூட்டை அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது, அதுவும் வைக்கப்படவில்லை. தற்போது வெள்ளநீர் சூழ்ந்த புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது. சென்னையில் கனமழை பெய்யும் போது எல்லாம், கருணாநிதியின் வீடு, மழைநீரால் சூழ்ந்து காணப்படுகிறது என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

ranjani
டிச 01, 2024 22:21

இது எந்த கருணாநிதி


Venkatesan Srinivasan
டிச 01, 2024 16:32

யாரும் 4000 கோடி என்று பேசமுடியாது. சாமானிய மக்கள் ஏதோ தாங்கள் மட்டுமே மழையால் பாதிக்கப்பட்டதாக, அரசியல் தலைவர்களின் இல்லங்கள் நல்ல பாதுகாப்பாக மழையால் பாதிப்பு இல்லாமல் இருப்பதாக எண்ணிக் கொள்ள வேண்டாம் என்ற கருத்தை விதைப்பதற்கு செய்த முயற்சியாக இருக்கும்.


ராஜா
டிச 01, 2024 03:47

வரப்போகும் 2026 சட்ட மன்றத் தேர்தலை முன்னிட்டு தகுதி வாய்ந்த எல்லாருக்கும் பத்தாயிரம் ரூபாய் வெள்ள நிவாரணம் உண்டு . கூடிய விரைவில் விண்ணப்ப படிவம் வழங்கப்படும்.


ராஜ்
டிச 01, 2024 03:43

கலைஞர் வீட்டு குடும்பத்தினர்களுக்கும் வெள்ள நிவாரணம் உண்டா.


HoneyBee
நவ 30, 2024 20:08

அங்கு சரியா பாருங்க ஒரு கட்டுமரம் மிதந்து போவுது...


Ramesh Sargam
நவ 30, 2024 20:06

சட்டம் எல்லோருக்கும் பொது என்று சொல்வார்கள். இப்ப பாருங்க பெருமழையும் எல்லோருக்கும் பொது. சட்டத்தை ஏமாற்றலாம். ஆனால், பெருமழையை ஏமாற்றவே முடியாது.


theruvasagan
நவ 30, 2024 19:49

கர்மா விடாது. சுத்தி சுத்தி அடிக்குது.


sridhar
நவ 30, 2024 19:13

அந்த வகையில் ஸ்டாலின் நேர்மையை பாராட்டலாம் , பாரபட்சம் இல்லாமல் எல்லா இடங்களும் நீரில் மிதக்கின்றன .


SUBBU,MADURAI
நவ 30, 2024 19:45

ரசித்து சிரிக்க வைத்த கருத்து...


கல்யாணராமன்
நவ 30, 2024 18:55

மழை எப்போதெல்லாம் பெய்கிறதோ அப்போதெல்லாம் கலைஞர் வீட்டின் முன்பு தண்ணீர் தேங்கி நிற்கிறது. வயதான தாயாரை அங்கே தனிமையில் தவிக்க விட்டுள்ள பிள்ளைகளுக்கு யார் புத்திமதி சொல்வது? ஸ்டாலின் அல்லது மு க அழகிரி தன் வீட்டில் அவரை வைத்து பராமரிக்க முடியாதா? ஒவ்வொரு அன்னையர் தினம், பிறந்த நாள், திருமண நாட்களில் மட்டும் அவரை சந்தித்து வாழ்த்து பெறுவதும் அதை பத்திரிக்கை டிவியில் விளம்பரம் செய்வது மட்டும் போதுமா?


J.V. Iyer
நவ 30, 2024 18:53

பெரியவர் போனவுடன் பவர் சென்டர் இடம் பெயர்ந்து விட்டது நிதர்சனமாக தெரிகிறது.


புதிய வீடியோ