உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராஜா - ஜாபர்சேட் ஆடியோ பதிவு அண்ணாமலை மீண்டும் வெளியீடு

ராஜா - ஜாபர்சேட் ஆடியோ பதிவு அண்ணாமலை மீண்டும் வெளியீடு

சென்னை:தி.மு.க., - - எம்.பி., --ஆ.ராஜா - - முன்னாள் டி.ஜி.பி., ஜாபர்சேட் உரையாடலின் ஆடியோ பதிவை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டார். அதில், சி.பி.ஐ., சோதனை செய்ய உள்ள தகவல் தொடர்பாக இருவரும் பேசியுள்ளனர். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 2023ல், 'தி.மு.க., பைல்ஸ்' மற்றும், 'தி.மு.க., பைல்ஸ் பாகம் - 2'ஐ வெளியிட்டார். அதில், முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினர், அமைச்சர்களின் தொழில் பட்டியலை வெளியிட்டு, பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார்.இந்தாண்டு ஜனவரியில், அண்ணாமலை, 'தி.மு.க., பைல்ஸ் - 3'ஐ வெளியிட்டார்.அதில், '2ஜி' அலைக்கற்றை வழக்கு தொடர்பாக, தி.மு.க., - எம்.பி., - டி.ஆர்.பாலு மற்றும் ஜாபர்சேட் உரையாடல் இடம் பெற்ற ஆடியோ பதிவு இருந்தது. அதைத்தொடர்ந்து, தி.மு.க., - எம்.பி., ராஜா மற்றும் ஜாபர்சேட் பேசும் ஐந்தாவது ஆடியோ பதிவை அண்ணாமலை நேற்று வெளியிட்டார்.அதில், இடம்பெற்றுள்ள உரையாடல் விபரம்:ராஜா: சார், நாளைக்கு ஒரு சின்ன சோதனை ஓட்டம் இருக்கு போல...ஜாபர்சேட்: என்ன சார்?ராஜா: சோதனை ஓட்டம் தமிழகம் முழுதும் இருக்குஜாபர்சேட்: நாளைக்கா, எங்கெங்கே?ராஜா: எல்லா இடத்திலும், எனக்கு வேண்டிய இடத்தில் எல்லாம்ஜாபர்சேட்: உங்களுக்கு வேண்டிய இடத்தில் எல்லாமா?ராஜா: ஆமாம்... நான் இன்னும் தகவலை பரிமாறவில்லை. எப்படி தகவல் சொல்லணும் என்று தெரியவில்லை; அந்த,' புரொசீஜரை குளோஸ்' செய்வதற்கு ஒரு சோதனை ஓட்டம் இருக்கும் போல; நம்ம ஆளு போனை, 'ஆப்' செய்து வைத்திருக்கிறார். அவருக்கு தகவல் சொல்லலாமா?ஜாபர்சேட்: யார் மூலமா?ராஜா: வேற நம்பர் இருக்கா என்ன? ஜாபர்சேட்: யாருக்கு?ராஜா: நம்ம பிரண்டுக்கு, நம்ம பிரண்டுக்குஜாபர்சேட்: யார், என் பிரண்டுக்கா?ராஜா: இல்ல இல்ல நம்ம பிரண்டுக்கு, பெரம்பலுாருக்கு ஜாபர்சேட்: என்னிடம் வேறு நம்பர் இல்லையே சார்!ராஜா: அவர் நம்பர் கிடைக்க மாட்டேங்குது...ஜாபர்சேட்: சரி, அப்படீன்னா?ராஜா: எல்லாரையும் அலர்ட் செய்யலாம்னு பார்த்தேன்ஜாபர்சேட்: வேற வழியில் தகவல் சொல்றேன்ராஜா: ஏற்கனவே நான் சொல்லிட்டேன். எல்லாருக்கும் போன வாரமே சொல்லிட்டேன்; பேக் வச்சுட்டு ரெடியாக இருங்கனுஜாபர்சேட்: இப்ப நேரம் இல்ல, காலைல, 6:00 மணிக்குராஜா: தவறான உள்நோக்கம் இல்லை, நீதிமன்றத்திற்கு முன்னாடி நான் எல்லார் வீட்டிற்கும் போகலாம் என்று சொல்லணும்ஜாபர்சேட்: ஆமாம், காலையில், 6:30 மணிக்கு முடிச்சுடலாம்ராஜா: 10, 12 இடங்களில் தொடர்ந்து ஒரே சமயத்தில் செய்வார்கள் போல, ஜாபர்சேட்: சரிங்க சார்ராஜா: சரி பார்ப்போம், முடிஞ்சா தகவல் சொல்ல, எனக்கு அவரு கிடைக்கவில்லை. அவரு இரவு முழுதும் கண் விழித்து, வீட்டில் எல்லாருக்கும் தகவல் சொல்லிடுவாரு ஜாபர்சேட்: பார்ப்போம், வேற இருக்கானு, நான் டிரை பண்றேன்ராஜா: தெரியவில்லை எனக்கு, வழக்கமான எண் கிடைக்கவில்லை.இவ்வாறு அந்த உரைடயாடல் இடம்பெற்றுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ