உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிப்பாற்றலால் பல தலைமுறைகளை கவர்ந்துள்ளார்: ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி பாராட்டு

நடிப்பாற்றலால் பல தலைமுறைகளை கவர்ந்துள்ளார்: ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நடிகர் ரஜினிகாந்த்துக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1u70c75n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் தமிழில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துக்கள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கள்ளம் கபடமற்ற...!

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: ரஜினிகாந்த் வயதை வென்ற வசீகரம்.மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்.ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர், இபிஎஸ்

தமிழ்த் திரையுலகின் அசைக்க முடியாத பேராளுமையாக 50 ஆண்டுகளாக கோலோச்சி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினி காந்துக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். திரையரங்குகளை திருவிழாக் கூடங்களாக மாற்றவல்ல தங்களின் ஸ்டையில் மெஜிக் ரசிகர்களை மகிழ்விக்கட்டும் பல்லாண்டு.

தமிழக பாஜ முன்னாள் தலைவர், அண்ணாமலை

இன்று 75வது பிறந்த நாள் கொண்டாடும், அன்புக்கும் மரியாதைக்கும் உரிய, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எளிய பின்னணியில் இருந்து வந்து, தனது கடும் உழைப்பாலும், மேன்மையான பண்புகளாலும், ஐம்பது ஆண்டுகளாக, இந்தியத் திரையுலகின் உச்சத்தில் இருப்பவர். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை, மூன்று தலைமுறைகளை தனது வசீகரத்தால் ஈர்த்திருப்பவர். சிறந்த தேசியவாதியும், பண்பாளருமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மேலும் பல்லாண்டுகள் நலமுடன், ஆரோக்கியத்துடன் வாழ, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

தமிழக பாஜ தலைவர், நயினார் நாகேந்திரன்

தமிழ் திரையுலகின் மார்க்கண்டேயன்; மூன்று தலைமுறைகளை ஆக்கிரமித்தவர்; திரையுலக வானில் நட்சத்திரமாக மிளிர்பவர்; 50 ஆண்டுகளாக மக்களின் இதயங்களில் ஆதர்ச நாயகனாக கோலோச்சி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு எனது இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். மேலும் பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் பெற்று திரையுலகில் பல சாதனைகளைப் படைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

நடிகர் கமல்ஹாசன்

75 வருட வாழ்க்கையில், 50 ஆண்டு கால சினிமா. வாழ்த்துக்கள் நண்பா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Rengaraj
டிச 12, 2025 13:55

இவரு குரல் கொடுத்தா ஜனங்கள் அப்படியே கேட்டுகிட்டு வோட்டுப் போடுவாங்கன்னு இன்னும் நம்புறாங்க. ஆளாளுக்கு அள்ளிவிடுறாங்க தேர்தல் சமயத்தில் அவர் இமயமலைக்கு போயிடுவார்,, பாருங்க .


Prasath
டிச 12, 2025 13:01

நீ இப்படியே புலம்பு ஓடாத அணில் கூட்டம் இப்படித்தான் பேசும்


Madras Madra
டிச 12, 2025 12:00

இவரின் ரசிகர்களின் வாக்கை கவர அவருக்கு சாமரம் வீசும் அரசியல் வாதிகள் இந்த ஆன்மீக வாதி ஒரு சுயநலவாதி தன் புகழ் தவிர வேறு ஒன்றும் அறியாதவர் ஆன்மீகத்துக்கு எதிரான ஆட்சி நடந்து கொண்டிருக்கும்போது வாயை மூடி கொண்டு வன்மம் பரப்பும் இயக்குனர்களை வாழ வைத்து கொண்டு இருக்கின்றார் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்


Prabu
டிச 12, 2025 11:58

பாட்சா ஓடு இவர் காலம் முடிந்து விட்டது . மீடியா துணையோடு வண்டி ஓட்டுகிறார்


Haja Kuthubdeen
டிச 12, 2025 11:55

இன்னுமா தமிழகம் இதையெல்லாம் நம்புது....


Rajah
டிச 12, 2025 11:03

நடிப்பாற்றல..........?


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 12, 2025 10:58

தங்கள் தலைவர்களை திரையில் தேடும் இளைஞர்கள் இருக்கும் வரை டுமீலு நாடு உருப்படுமா


vbs manian
டிச 12, 2025 10:58

இந்த நடிகர் இவரை தாங்கி பிடித்த சமுதாயத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும். வீர வசனம் படங்களில் பேசியவர். கோடிக்கணக்கான ஏழை ரசிகர்கள் ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி இவர் படத்தை திரும்ப திரும்ப பார்த்து சில்வர் ஜூபிலியாக ஏற்றியவர்கள். திரும்ப கைம்மாறு செய்தல் ஈர்த்த செல்வத்துக்கு ஒரு மதிப்பு வரும் ஜீரணம் ஆகும்.


Matt P
டிச 12, 2025 10:11

பிரதமர், ரஜினி நடித்த படங்களை மெனக்கெட்டு பார்த்து ரசித்து நடிப்பாற்றலை பற்றி தெரிஞ்சிருப்பாரோ.


Barakat Ali
டிச 12, 2025 09:23

அப்போ முரசொலி படிக்கிறவங்க, துக்ளக் படிக்கிறவங்க இவங்களை அவரு கம்பேர் பண்ணுனதை மறந்துட்டீங்க ...... அதனால நீங்க ரெண்டு பேருமே கள்ளம் கபடமற்ற நெஞ்சம் கொண்டவர்கள்தான் .....


புதிய வீடியோ