உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயங்கரவாத சம்பவங்களை ஒப்பிட்டு கடலோர மக்களுக்காக ரஜினி வீடியோ வெளியீடு

பயங்கரவாத சம்பவங்களை ஒப்பிட்டு கடலோர மக்களுக்காக ரஜினி வீடியோ வெளியீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கடலோர பகுதியில் வாழும் மக்கள் விழிப்புணர்வோடு இருந்து, சந்தேகத்திற்குரிய மக்கள் யாராவது நடமாடினால், அருகில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.இது குறித்து கடலோர மக்களுக்காக ரஜினி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம், நம்ம நாடு மற்றும் மக்களின் நற்பெயர் அதனை கெடுக்க பயங்கரவாதிகள் கடல் வழியாக நாட்டிற்குள் புகுந்து, கோர சம்பவங்கள் செய்வார்கள். அதற்கு உதாரணம் மும்பையில் 26/11ல் நடந்த கோர சம்பவம். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cqtjmte2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கிட்டத்தட்ட 175 பேரின் உயிரை வாங்கியிருச்சு. இந்த கடலோர பகுதியில் வாழும் மக்கள் விழிப்புணர்வோடு இருந்து, சந்தேகத்திற்குரிய மக்கள் யாராவது நடமாடினால், அருகில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த, சி.ஐ.எஸ்.எப், வீரர்கள் 100 பேர் கிட்டத்தட்ட 7 ஆயிரம் கிலோ மீட்டர் மேற்குவங்கத்தில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணம் செய்வார்கள். அவர்கள் உங்கள் ஏரியாவிற்கு வரும் போது அவர்களை வரவேற்று, முடிந்தால் அவங்களுடன் கொஞ்சம் தூரம் போய், உற்சாகப்படுத்துங்க. நன்றி. வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ் மக்கள். ஜெய்ஹிந்த். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Varuvel Devadas
மார் 25, 2025 17:00

It seems this comedy piece is still active. His film has to be sold in the market, so that as and when required, he makes noise. Nothing to worry. It seems he is still s.


Rajah
மார் 24, 2025 11:47

முதலில் நீங்கள் எந்த கட்சி சார்பானவர் என்று வெளிப்படையாக சொல்லிவிடுங்கள். ஸ்டாலின் நினைப்பதை உங்களை வைத்து சொல்ல வைக்கின்றார். துரைமுருகன் இன்னும் உங்களோடு கோபத்தில் இருக்கின்றார். சினிமாவில் பல வேஷங்கள். நிஜ வாழ்க்கையிலும் வேஷங்கள். சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வருவது ஜனநாயகத்திற்கு ஏற்புடையது. ஆனால் ஒரு கொள்கையில் இருங்கள்.


Subburamu Krishnasamy
மார் 23, 2025 21:20

Please don't forget me. I am still active in films, doing social service. and always remember me as I am doing very great service to poor peoples


அப்பாவி
மார் 23, 2025 21:08

இந்தக் கூத்தாடிய வெச்சு பொறுப்பான கடற்படை ஆபீசர் வேசம் கட்டி படம் எடுக்க எவனாவது தயாராவறாரோ? இப்பவே டிரெய்லர் பில்டப் குடுக்கற மாதிரி இருக்கே.


சுந்தர்
மார் 23, 2025 17:39

இந்த மாதிரி வாய்ஸ் கொடுத்து மக்களுக்கு நல்லது செஞ்சா மட்டும் போதுமே. உங்க ரசிகர்களையும் சைக்கிள் பயணம் மேற்கொள்ள சொல்லுங்க...


Balaa
மார் 23, 2025 17:36

ஒரமா போய் உட்கார். பெருந்சுயநல வியாதி.


RaajaRaja Cholan
மார் 23, 2025 18:11

வந்துட்டார் பொதுநல வாதி.


Padmasridharan
மார் 23, 2025 17:26

அய்யா வணக்கம், திருவான்மியூர் கடலோரப்பகுதியில் காவலர்களே மது_மாது வோடு வரும் நண்பர்கள்_காதலர்கள் இவர்களை அசிங்கமாக பேசி, அடித்து, மிரட்டி 3000௹ பணம் வாங்குகிறார்கள். பார்ப்பவர்களை எல்லாம் புகைப்படம் எடுத்து, மொபைலை புடிங்கி, பெட்டி கேஸ் போடுகிறேன், காவல் நிலையத்துக்கு வந்து ஃபைன் கட்டி செல் என்கிறார்கள். காவலர்களே அங்கு குடித்துக்கொண்டு மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். அதனால் இந்த கடலோர பகுதியில் வாழும் மக்களுக்கு அந்த கவலை வேண்டியதில்லை. விழிப்புணர்வோடு இருந்து, பணி புரிந்து அதிகார பிச்சை எடுப்பவர்கள் திரிந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் சந்தேகத்திற்குரிய மக்கள் யாரும் நடமாடமாட்டார்கள் இவர்களை தவிர.


TRE
மார் 23, 2025 17:17

கமல்ஹாசன் லைம் லைட்ல இருந்தா இந்த மெண்டல் சங்கீ அத divert பண்ண ஏதாவது சொல்லிவைப்பான் இவனுக்கு கமல் மேல காண்டு ஆக இருப்பான்


கடல் நண்டு
மார் 23, 2025 16:34

சிலருக்கு கடல் தொழில் மீன்பிடி பெயரிலான கடத்தல் நொழில் பாதிக்கப்படுமே… தாய்நாடே தமிழ்நாடு மட்டும் தான் என கொம்பு சீவி விட்டுக்கொண்டிருக்கும் பிரிவினை வாத அரசியல்வாதிகளும் , கட்சிகளுட் இங்கு ஆதிக்கம் செய்யும் வரை தேச துரோக செயல்கள் நடைபெறுவதை தடுக்க இயலாது ..


கடல் நண்டு
மார் 23, 2025 16:34

சிலருக்கு கடல் தொழில் மீன்பிடி பெயரிலான கடத்தல் நொழில் பாதிக்கப்படுமே… தாய்நாடே தமிழ்நாடு மட்டும் தான் என கொம்பு சீவி விட்டுக்கொண்டிருக்கும் பிரிவினை வாத அரசியல்வாதிகளும் , கட்சிகளுட் இங்கு ஆதிக்கம் செய்யும் வரை தேச துரோக செயல்கள் நடைபெறுவதை தடுக்க இயலாது ..


சமீபத்திய செய்தி