அக். 12 வரை ராமதாஸ் ஓய்வு
சென்னை:'இதய மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், வரும் 12ம் தேதி ஓய்வு எடுப்பார்' என்று, அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பா.ம.க., வெளியிட்டுள்ள அறிக்கை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், மருத்துவ பரிசோதனை முடிந்து, நேற்று முன்தினம் நலமுடன் வீடு திரும்பியுள்ளார். டாக்டர்கள் ஓய்வெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். எனவே அக் 12 வரை அவர் ஓய்வெடுக்க உள்ளார். எனவே, ராமதாசின் பார்வையாளர் சந்திப்பு, அக்.12 வரை ரத்து செய்யப்படுகிறது. அவரை சந்திக்க விரும்பும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், வரும் 13ம் தேதியிலிருந்து வழக்கம் போல் தினமும் காலை 10:00 முதல் 12:00 மணி வரை நேரடியாக சந்திக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.