உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரும்புகையுடன் தீப்பற்றி எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்; மக்கள் அலறி அடித்து ஓட்டம்

கரும்புகையுடன் தீப்பற்றி எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்; மக்கள் அலறி அடித்து ஓட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதுபற்றிய விவரம் வருமாறு; ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி குத்துக்கல் தெருவை சேர்ந்தவர் முகமது சித்திக். இவர் பரமக்குடியில் புரோட்டா கடை நடத்தி வருகிறார். முகமது சித்திக் கடந்த இரண்டு ஆண்டுகளாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வாங்கி பயன்படுத்தி வருகிறார்.இன்று (ஜன.22)திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ராமநாதபுரம் வந்துள்ளார். அதே நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் படிக்கும் அவரது மகன் ரயிலில் ராமநாதபுரம் வந்துள்ளார்.மகனை அழைத்து வர ராமநாதபுரம் ரயில் நிலையத்திற்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்ற முகமது சித்திக் ரயில் நிலைய நுழைவு வாயில் முன் வண்டியை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அவர் உள்ளே நுழைந்த சிறிது நேரத்தில் ஸ்கூட்டரில் இருந்து முதலில் கரும்புகை வெளி வந்துள்ளது.அடுத்த சில நொடிகளில் ஸ்கூட்டர் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. இதனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ டிரைவர்கள் அவசர அவசரமாக தங்கள் ஆட்டோக்களை அப்புறப்படுத்தினர்.தொடர்ந்து கொளுந்து விட்டு எரிந்த ஸ்கூட்டரால் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மற்றொரு இரு சக்கர வாகனத்திலும் தீ பரவியது. பெரிய சேதம் ஏதும் இல்லாத நிலையில், முகமது சித்திக்கின் ஸ்கூட்டர் முற்றிலும் எரிந்து நாசமானது. சம்பவம் குறித்து முகமது சித்திக் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

kamalanathan k
ஜன 22, 2025 17:44

எந்த கம்பெனி என்ன மாடல் கொஞ்சம் sollunga


RAMAKRISHNAN NATESAN
ஜன 22, 2025 15:36

இரவு முழுவதும் லித்தியம் ஐயான் பாட்டரிகளை சார்ஜில் போடக்கூடாது ...... ஒவ்வொரு முறையும் அறுபது சதவிகிதத்துக்கு மேல் சார்ஜ் செய்யாமலிருப்பது பாதுகாப்பு .....


Krishnamurthy Venkatesan
ஜன 22, 2025 14:05

இரெண்டு வருடங்கள் வரை எந்த பாதிப்பும் இல்லை என்பதை கவனிக்கவும்.


jayvee
ஜன 22, 2025 13:53

ஒவ்வொருமுறையும் நான் மின்சார இருசக்கர வாகனம் வாங்கலாம் என்று நினைக்கும் பொது இப்படி ஒரு செய்தி வந்து என்னை பயமுறுத்துகிறது ..அது என்ன ப்ராண்ட் என்றும் போடுங்கள் ..நாங்கள் உஷாராக இருப்போம்


இரா. சந்திரன்
ஜன 22, 2025 16:05

கரெக்ட்.. பிராண்ட் பெயருடன் செய்தி போட்டால் மக்களுக்கு உபயோகமாக இருக்கும். நான் ஓலா வாங்கி ஒரு வருடமாக யூஸ் பண்றேன். இதுவரை பிரச்சினை ஏதுமில்லை.


அப்பாவி
ஜன 22, 2025 11:28

பாதுகாப்பு கட்டமைப்பு இல்லாமல் வாகனங்களை இப்போ கண்டவனும் ஸ்டார்ட் அப் நு தயாரிச்சு விக்கிறான். விலை குறைவுன்னு கண்டவனெல்காம் வாங்குறான். ஆனா ஒரே ஒருத்தர் மட்டும் ஸ்டார்ட் அப் வளர்ச்சி அபாரம்னு மெடல்.குத்திக்குவாரு.


Laddoo
ஜன 22, 2025 13:35

ரெயில் பயணத்துல விபத்து என்று ரெயில் போகாம இருப்பியா அல்லது விமான விபத்து என்று விமான பயணத்தை ரத்து செய்வியா. குறை சொல்வதே ஒனனோட குணம்.


vivek
ஜன 22, 2025 15:06

ரஜினி படத்தில் வரும் பரட்டை இவர்தான்....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை