உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமநாதபுரம், நெல்லை சரக டி.ஐ.ஜி.,க்கள் உள்ளிட்ட ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

ராமநாதபுரம், நெல்லை சரக டி.ஐ.ஜி.,க்கள் உள்ளிட்ட ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி., நெல்லை சரக டி.ஐ.ஜி., உள்ளிட்ட ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். முன்னாள் போலீஸ் அதிகாரி ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்ட நிலையில், நெல்லை சரக டி.ஐ.ஜி., இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ் குமார் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி., அபிநவ் குமார் - மதுரை சரக டி.ஐ.ஜி., ஆகவும்திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி., மூர்த்தி - ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.,ஆகவும்திருநெல்வேலி போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமானிக்கு கூடுதலாக நெல்லை சரக டி.ஐ.ஜி., பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்.திருப்பூர் சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் சுஜாதா- ஈரோடு எஸ்.பி., ஆகவும் ஈரோடு எஸ்பி ஜவஹர்- சிபிசிஐடி வடக்கு மண்டல எஸ்.பி. ஆகவும்சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சக்திவேல் - சென்னை போலீசின் உளவுப்பிரிவின் துணை கமிஷனர் ஆகவும்சென்னை கிழக்கு போக்குவரத்து துணை கமிஷனர் பாஸ்கரன் - சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ஆகவும்சென்னை போலீசின் நலன் மற்றும் எஸ்டேட் பிரிவு துணை கமிஷனர் மேகலினா ஐடன்- சென்னை கிழக்கு போக்குவரத்து துணை கமிஷனர் ஆகவும்சென்னை மைலாப்பூர் துணை கமிஷனர் ஹரி கிரண் பிரசாத் - சென்னை போலீசின் நலன் மற்றும் எஸ்டேட் பிரிவு ணை கமிஷனர் ஆகவும்பழநி,தமிழக போலீஸ் சிறப்பு படை பிரிவு 14வதுபட்டாலியன் கமாண்டன்ட் கார்த்திக் - சென்னை மைலாப்பூர் துணை கமிஷனர் ஆகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Appa V
மார் 25, 2025 20:43

நிரந்தரம் ஸ்டாலின் உதயநிதி துரைமுருகன்...IPS IAS எல்லாம் இவா முன்னாடி கத்துக்குட்டிகள்...


Ramesh Sargam
மார் 25, 2025 19:23

IPS - Indian Pet Service. ஆம் இந்த IPS அதிகாரிகளெல்லாம் திமுகவின் வளர்ப்பு பிராணிகள்.


अप्पावी
மார் 25, 2025 18:47

எங்கே மாத்திப் போட்டாலும் ஒண்ணு வேலை தெரியணும். ரெண்டு நேர்மை இருக்கணும். ரெண்டும் இல்லாதவங்களை எங்கே மாத்திப் போட்டாலும் உருப்படாது.


Ramesh Sargam
மார் 25, 2025 18:44

இடமாற்றம் செய்வதால் அவர்கள் என்ன புதிய இடத்தில் நேர்மையாக, கண்ணியமாக பணி செய்துவிடுவார்களா? எல்லாம் நாடகம்.


ManiK
மார் 25, 2025 17:59

ஸ்டாலின் சீட்டுகட்டு விளையாட்டு மாதிரி அதிகாரிகளை தேவையே இல்லாமல் பநதாடுகிறார். சும்மா நானும் ரவுடிதான் பாணியில்.


என்றும் இந்தியன்
மார் 25, 2025 17:27

ஆகவே இதனால் தெரிவிக்கப்படுவது என்னவென்றால் அரசு அதிகாரிகளுக்கு உங்களுக்கு பணியிலிருந்து இடமாற்றம் வேண்டுமென்றால் 1 அரசு அதிகாரியாக இருந்தால் நிறைய லஞ்சம் வாங்குங்கள் 2-நீதிபதியாக இருக்கும் பட்சத்தில் கோடிக்கணக்கில் ஸ்டோர் ரூமில் பணம் சேர்த்து வையுங்கள், ஆனால் அது உங்கள் பணம் இல்லை என்று சொல்லுங்கள் 3- போலீஸ் அதிகாரியாக இருக்கும் பட்சத்தில் ஒரு கொலை செய்ய வையுங்கள்


sundarsvpr
மார் 25, 2025 17:11

அதிகாரிகள் எல்லோரும் தேர்வில் தேர்ந்துஎடுக்கப்பட்டவர்கள். எனவே திறமைபெற்றவர்கள். மக்களை சந்தித்தால் இவர்கள் மனம் சிதறவுஇல்லை. ஆனால் சுயநலமுள்ள அரசியல்வாதிகள் சகவாசம் உண்டானால் மனம் மாறி திசைமாறி செல்கிறார்கள். எதிர்பார்த்த பயனில் குறைபாடு காணின் மாற்றப்படுவார்கள். ஆனால் மாற்ற உத்தரவில் நிர்வாக நலனை முன்னிட்டு பொய்யான வாசகம் இருக்கும்அலுவலர்கள் மாற்றம் ஒரு eye wash .


sundarsvpr
மார் 25, 2025 17:11

அதிகாரிகள் எல்லோரும் தேர்வில் தேர்ந்துஎடுக்கப்பட்டவர்கள். எனவே திறமைபெற்றவர்கள். மக்களை சந்தித்தால் இவர்கள் மனம் சிதறவுஇல்லை. ஆனால் சுயநலமுள்ள அரசியல்வாதிகள் சகவாசம் உண்டானால் மனம் மாறி திசைமாறி செல்கிறார்கள். எதிர்பார்த்த பயனில் குறைபாடு காணின் மாற்றப்படுவார்கள். ஆனால் மாற்ற உத்தரவில் நிர்வாக நலனை முன்னிட்டு பொய்யான வாசகம் இருக்கும்அலுவலர்கள் மாற்றம் ஒரு eye wash .


சுராகோ
மார் 25, 2025 17:06

மக்கள் எல்லோரும் இந்த அரசே சரியில்லை என்று மாற்ற தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். ஆட்சியாளர்களுக்கு இது புரியாமல் இருப்பது அவர்கள் அறியாமையா அல்லது தெரிந்தும் தெரியாமல் இருக்கிறார்களா?


சமீபத்திய செய்தி