உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வன்கொடுமை வழக்கு: காஞ்சி டி.எஸ்.பி., கைது; நீதிபதி காரில் சிறைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு

வன்கொடுமை வழக்கு: காஞ்சி டி.எஸ்.பி., கைது; நீதிபதி காரில் சிறைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு

காஞ்சிபுரம் : எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை வழக்கில் பதிவு செய்யப்பட்டோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்காத காஞ்சிபுரம் டி.எஸ்.பி., சங்கர்கணேஷை நேற்று கைது செய்ய, காஞ்சி புரம் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி, நேற்று உத்தரவிட்டார். நீதிமன்ற வளாகத்தில், காவலர் சீருடையுடன் டி.எஸ்.பி.,யை போலீசார் கைது செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது . காஞ்சிபுரம் மாவட்டம், நத்தப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவ குமார். இவர், வாலாஜாபாத் அருகே உள்ள பூசிவாக்கம் கிராமத்தில் டீ மற்றும் பேக்கரி கடை நடத்துகிறார் . https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=a6ee9h25&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

கைகலப்பு

இந்த கடைக்கு, கடந்த ஜூலை மாதம் இறுதியில், பூசிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் கேக் வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது, கேக் நன்றாக இல்லை எனக்கூறியதால், கடை உரிமையாளர் சிவகுமாருக்கும், முருகனுக்கும் வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு பின், சிவகுமாரின் மருமகனான, போலீஸ்காரராக பணியாற்றும் லோகேஷ், 32, முருகனிடம் பிரச்னை செய்துள்ளார். இதுகுறித்து முருகனின் மனைவி பார்வதி என்பவர், வாலாஜாபாத் போலீசில் சிவ குமார், லோகேஷ் உள்ளிட்ட நான்கு பேர் மீது புகார் அளித்தார். நான்கு பேர் மீதும் எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தின் கீழ், போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் அவர்களை கைது செய்யவில்லை. இதுகுறித்து தாமாக முன்வந்து, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செம்மல் விசாரணையை துவக்கினார். அப்போது, 'போலீஸ்காரரான லோகேஷ் உள்ளிட்ட நான்கு பேரையும், காவல் துறை ஏன் கைது செய்யவில்லை' என, கேள்வி எழுப்பியிருந்தார். இந்த வழக்கு விசாரணை நேற்று, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் டி.எஸ்.பி., சங்கர்கணேஷ், இவ்வழக்கு சம்பந்தமாக ஆஜரானார். அப்போது, இந்த வழக்கில் லோகேஷ் மீது நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டிய நீதிபதி, டி.எஸ்.பி., சங்கர்கணேஷை, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். டி.எஸ்.பி.,யை கைது செய்ய உத்தரவிட்டும், போலீசார் அவரை கைது செய்ய முன்வரவில்லை. இதையடுத்து, தன் காரிலேயே டி.எஸ்.பி.,யை நீதிமன்ற கிளை சிறைக்கு அழைத்து செல்ல, நீதிபதி செம்மல் போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

பரபரப்பு

நீதிபதி காரில், அதே வளாகத்திலேயே உள்ள கிளை சிறைக்கு காவலர் சீருடையுடன் டி.எஸ்.பி., அழைத்து செல்லப்பட்டார். காரில் இருந்து இறங்கிய டி.எஸ்.பி., சங்கர்கணேஷ், அங்கு நிறுத்தியிருந்த 'பொலீரோ' போலீஸ் வாகனத்தில் ஏறினார். அதன் ஓட்டுநர், படுவேகமாக நீதிமன்ற வளாகத்திலிருந்து காரை ஓட்டிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், கிளை சிறைக்கு செல்லாமல், டி.எஸ்.பி., மாயமானதாக தகவல் வெளியானது. ஆனால், 10 நிமிட இடைவெளியில், கிளை சிறைக்கு அவர் வந்துவிட்டார். கிளை சிறையில் இருந்து, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை முடித்து, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால், நீதிமன்ற வளாகம் முழுதும் பரபரப்பு ஏற்பட்டது. நீதிபதி செம்மல்லின், பி.எஸ்.ஓ., எனும் தனிப்பட்ட பாதுகாப்பு போலீஸ்காரராக லோகேஷ், சில மாதங்களுக்கு முன் பணிபுரிந்தார். திடீரென அவர், செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றத்தை நாடுவோம்

முருகன் தரப்பு கொடுத்த புகாருக்கு நாங்கள் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளோம். டி.எஸ்.பி.,யை கைது செய்ய உத்தரவிட்டது எப்படி சரியாக இருக்கும். இந்த வழக்கில் தனிப்பட்ட வெறுப்பு உள்ளது. டி.எஸ்.பி., சங்கர்கணேஷ் எங்கேயும் தப்பி ஓடவில்லை. மதியம் முதல் நீதிமன்றத்திலேயே இருந்ததால், அவர் கழிப்பறைக்கு தான் சென்றார். தப்பி ஓடியதாக வந்த தகவல் பொய்யானது. நாங்கள், உயர் நீதிமன்றத்தை நாடி, இதற்கான தீர்வை பெறுவோம். - சண்முகம், காஞ்சிபுரம் எஸ்.பி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

KRISHNAN R
செப் 09, 2025 16:04

ஒருவருக்கும் நாம் பச்சாதாபபட தேவை இல்லை


G R
செப் 09, 2025 13:04

FiR has to be registered as per the Act. Arrest is not compulsory.


vijay
செப் 09, 2025 12:16

தனிப்பட்ட விருப்பு வெறுப்பு காரணமாக, அதிகாரிகள் பழிவாங்கப்படுவது, நிர்வாகத்தினை, மிக பெரிய ஆபத்தில் கொடுத்து விடும். இதே முறையில் அவர்கள் திருப்பி பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் என்ன ஆகும் நிலைமை. எனவே, நியாயமான முறையில் வேறு நீதிமன்றத்தில் வைத்து விசாரித்து பாகு பட்டு இல்லாமல் நடவடிக்கை எடுக்கவும் .


Natarajan Ramanathan
செப் 09, 2025 11:43

இந்த அநீதிபதி செம்மல் மீது காவல்துறை வன்கொடுமை வழக்கு பதிந்து கைது செய்யவேண்டும்.


visa lakshmi
செப் 09, 2025 11:36

இந்த வழக்கை வேறு அதிகாரிக்கு மாற்றி டிஎஸ்பி மீது குற்றவாளிகளின் மீதும் நடவடிக்கை மேற்கொண்டு இருக்கலாம். டிஜிபிக்கு கடிதம் மூலம் டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை சமர்ப்பிக்க உத்தரவிட்டிருக்கலாம். நீதி அரசருக்கு மாற்று வழிகள் இருந்தும். அவர் பயன்படுத்தவில்லை.அதிரடியாக இப்படி செயல்படுவது அதிகாரத்தின் உச்சம்.


visa lakshmi
செப் 09, 2025 11:29

மான்புமிகு நீதி அரசர் அவர்கள் இந்த வழக்கை வேறு அதிகாரிக்கு மாற்றி டிஎஸ்பி மற்றும் அதனைச் சார்ந்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு இருக்கலாம். டிஎஸ்பி மீது காவல்துறை டிஜிபிக்கு நடவடிக்கை எடுக்கக்கோரி அனுப்பி இருக்கலாம் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை சமர்ப்பிக்க அறிவுறுத்திருக்கலாம் நேரடியாக கைது செய்வது சிறையில் அடைப்பது என்பது அதிகாரத்தின் உச்சம். மாற்று வழிகள் இருக்கும் போது இப்படி அதிரடி செயல்படுவது. நியாயம் இல்லை வழக்குகளை ஒரு வருடத்திற்கு முடிக்காமல் 20 வருடம் இழுத்து வக்கீல்கள் சம்பாதிப்பதற்கு நீதித்துறையை என்ன நடவடிக்கை ??


Barakat Ali
செப் 09, 2025 11:22

விடியல் ஆட்சியில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்துமே விதிமீறல்தான் .... சட்டத்துக்கு சவால் விடுபவைதான் ....


theruvasagan
செப் 09, 2025 10:42

பகிங்கிரமாக பொது வெளியில் ஊடக நிருபர்கள் முன்னிலையில் நாங்கள் போட்ட பிச்சை என்று சொன்னதும் நாங்களும் உங்களை போலவா என்று கேட்டதும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வராதா. அதற்கு எந்த நீதிமன்றமும் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்யவில்லையே. என்ன காரணம். வன்கொடுமை சட்டமே தவறாக பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ள சட்டமாக உள்ளது. அதிலும் எந்த பூர்வாங்க விசாரைணயோ தகவலோ உறுதி செய்யாமல் கைது நடவடிக்கை என்பது வேண்டாத நபர்களை பழிவாங்கும் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.என்பதை பல நேரங்களில் பார்க்கிறோம். வரதட்சணை மற்றும் மகளிர் வன்கொடுமை சட்டமும் இதே மாதிரியே. இந்த சட்டங்களின் தீவிரமான சில அம்சங்களை மறுபரிசீலனை செய்வது மிக அவசியம்.


Ramesh Sargam
செப் 09, 2025 10:01

பலர் டிஎஸ்பிக்கு ஆதரவாகவும், நீதிபதிக்கு எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளனர். என்னுடைய ஒரே கேள்வி, வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஏன் அந்த டிஎஸ்பி கைது செய்யவில்லை?


G R
செப் 09, 2025 13:06

FIR is compulsory, not arrest, under the ACT


கூத்தாடி வாக்கியம்
செப் 09, 2025 09:37

வரதட்சணை கேஸ் மற்றும் வன்கொடுமை சட்டங்களைமறு பரசீலனை செய்ய வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை