உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷன் பொருட்கள் இனி வீடு தேடி வரும்; 10 மாவட்டங்களில் ஜூலை 1ல் துவக்கம்

ரேஷன் பொருட்கள் இனி வீடு தேடி வரும்; 10 மாவட்டங்களில் ஜூலை 1ல் துவக்கம்

சென்னை : வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம், சென்னை உட்பட 10 மா வட்டங்களில், ஜூலை 1ம் தேதி முதல் சோதனை ரீதியாக துவங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.தமிழக ரேஷன் கடைகளில், 2.25 கோடி கார்டுதாரர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் மாதந்தோறும் வழங்கப்படுகின்றன. கார்டில் உள்ள உறுப்பினர்கள், கடைக்கு சென்று விற்பனை முனைய கருவியில் கைரேகையை பதிவு செய்தால் தான் பொருட்கள் வாங்க முடியும்.மூத்த குடிமக்கள், நடக்க முடியாத அளவு உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும், தங்களின் சார்பில் வேறு நபரை அனுப்பி பொருட்கள் வாங்கலாம். இதற்காக அவர்கள், மற்றவர்களின் உதவியை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.எனவே, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி கார்டுதாரர்களின் வீடுகளில் நேரடியாக ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும் திட்டத்தை துவக்க, அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டம் சோதனை ரீதியாக, வரும் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை சென்னை, திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல், ராணிப்பேட்டை, ஈரோடு, தர்மபுரி, நாகை, நீலகிரி, கடலுார் ஆகிய மாவட்டங்களில் துவங்க உள்ளது. முதற்கட்டமாக, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளன.இதற்கான ஏற்பாடுகள் செய்வது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை உயரதிகாரிகள், மண்டல இணை பதிவாளர்கள் மற்றும் மாவட்ட வழங்கல் அதிகாரிகளுடன், ஆன்லைன் வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினர்.

இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வேனில் ரேஷன் பொருட்கள், விற்பனை முனைய கருவி, விழிரேகை கருவியை எடுத்துச் சென்று, 'ஆதார்' சரிபார்க்கப்பட்டு மூத்த குடிமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை பயனாளிகள் என்ற விபரத்தை உணவு துறை வழங்கும்; அதற்கு ஏற்ப கூட்டுறவு ஊழியர்கள் வினியோகிப்பர்.வரும் சுதந்திர தினம் அல்லது செப்., மாதத்தில் இருந்து, மாநிலம் முழுதும் உள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு, ரேஷன் பொருட்கள் நேரடியாக வினியோகம் செய்யப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

NAMBIRAJAN M
ஜூன் 29, 2025 16:05

இதெல்லாம் இப்ப தான் தோணுச்சோ


NAMBIRAJAN M
ஜூன் 29, 2025 16:04

எல்லா திட்டமும் தேர்தலுக்கு கொஞ்ச நாளுக்கு முன்னால தான வரும்


theruvasagan
ஜூன் 28, 2025 22:19

வீட்டுக்கே கொண்டு வந்து தருவதால் பதிலுக்கே சம்திங் வாஙகாம போவார்களா


SUBRAMANIAN P
ஜூன் 28, 2025 14:05

ரேஷன் பொருட்கள் வீடுதேடி வரும் அடடே ஆச்சரியக்குறி யார் வீடுதேடி வரும்? அடடே கேள்விக்குறி?-


Jeyavelmurugan R
ஜூன் 28, 2025 10:34

, மதுரை ,தெருகுவாசல்,10கிகி அரிசி போடுகிறார்.ராஜன்பக்க்கேரி பின்புறம்,இதுவரை ஏந்த பதில் இல்லை


உண்மை கசக்கும்
ஜூன் 28, 2025 08:55

இருபது ஆண்டுகளுக்கு முன்பே விஜயகாந்த் கொடுத்த வாக்குறுதி..


Kasimani Baskaran
ஜூன் 28, 2025 08:48

வீடுகளுக்கு சென்று பொருள்களை விநியோகிக்கும் இவர்களை யார் கண்காணிப்பது. மொத்தமாக அனைத்தும் கேரளாவுக்கு விலங்குகளுக்கு உணவாகத்தான் போகிறது.


அப்பாவி
ஜூன் 28, 2025 08:32

இன்னும் நூறு வருசத்துக்கு ரேசன் கார்டு பிச்சைக்ஜாரங்களா வெச்சிருக்கும் ஒன்றிய, மாநில அரசுகள்.


V RAMASWAMY
ஜூன் 28, 2025 08:27

நேரில் சென்று வாங்கினால் ஊழல், இனி கேட்கவே வேண்டாம். அது சரி, ரேஷன் பொருட்கள் தேவைப்படுவோருக்கு செல்கிறதா இல்லையா என்பதை அடிக்கடி ஆய்வு செய்வதுண்டா? தேவையற்றவர்கள் பலர் ரேஷன் பொருட்களை வாங்கி விற்று லாபம் சம்பாதிக்கின்றனர் என்று தெரிய வருகிறது. வறுமையே ஒழிந்துகொண்டிருக்கும் நிலையில் இம்மாதிரி ரேஷன் முதலிய சலுகைகளை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தப்பட்டு மக்கள் வரிப்பணம் பல வகைகளில் கொள்ளைபோவதை தடுக்க வேண்டும்.


Amar Akbar Antony
ஜூன் 28, 2025 06:32

டெல்லியிலே ஒருவர் இருந்தார் முதல்வராக. அவர் கொண்டுவந்த பாணியிலே இங்கே இவரும் நகர்கிறார். அங்கே மதுபானக்கொள்ளை. இங்கே டாஸ்மாக் மற்றும் கனிமவளக்கொல்லை.. முடிவும் ஒன்றாகவே?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை