ரேஷன் ஊழியர்கள் வேலைநிறுத்தம்
சென்னை:ரேஷன் பொருட்களை பாக்கெட்டில் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தினர், நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாளை வரை போராட்டம் தொடர்வதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து, சங்கத் தலைவர் ஜெயச்சந்திரராஜா கூறியதாவது:தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து, சரியான எடையில் பொருட்கள் வழங்க வேண்டும், ரேஷன் பொருட்களை பாக்கெட்டில் வழங்க வேண்டும், பொது வினியோக திட்டப் பணிகளை, மூன்று துறைகளுக்கு பதில், ஒரே துறையின் கீழ் மேற்கொள்ள வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலுார், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில், 80 சதவீத ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. கூட்டுறவு மற்றும் உணவுத் துறை உயர் அதிகாரிகள், எங்களை அழைத்துப் பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். நாளை வரை போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.