உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராவணன் அவமதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது; சீமான் கொந்தளிப்பு

ராவணன் அவமதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது; சீமான் கொந்தளிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ராவணன் அவமதிக்கப்படுவதை இனியும் அனுமதிக்க முடியாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது குறித்து சீமான் கூறியிருப்பதாவது: ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன் நகரங்களில் வரும் அக்டோபர் 27ம் தேதி ராவண வதம் என்ற பெயரில் சிலர் நிகழ்வு ஏற்பாடு செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. கலை பத்தில் தலை சிறந்தவன் திசை எட்டும் புகழ்கொண்டவன் எங்கள் ராவணப் பெரும்பாட்டன். பத்து கலை என்பதை பத்து தலை எனத் திரித்து கதைகளை கட்டமைத்து அருவருக்கத்தக்க தோற்றத்தை உருவாக்கி அவமதித்ததோடு, தொல்தமிழ் மூதாதை ராவணப்பெரும்பாட்டன் உருவத்தை எரிப்பதை ஒவ்வொரு ஆண்டும் விழாவாகக் கொண்டாடுவதென்பது எவ்வகையிலும் ஏற்புடையதன்று.

பண்பாட்டு பாசறை

உலகின் எந்த மூலையில், எந்த வடிவில் தமிழர் மூதாதை ராவணப்பாட்டன் இழிவுப்படுத்தப்பட்டாலும் அது உலகத்தமிழர் அனைவரையும் அவமதிப்பதற்கு ஒப்பாகும். மானத்தமிழினம் அதனை இனியும் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருக்காது என எச்சரிக்கிறேன். நாம் தமிழர் கட்சி தம்முடைய பண்பாட்டு பாசறையான வீரத்தமிழர் முன்னணி மூலம் உலகெங்கும் தமிழர் வாழும் இடங்களில் எல்லாம் ராவணப்பெருவிழாவை விரைவில் முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தவறான செயல்

ஆகவே, ஆஸ்ரேலிய வாழ் தமிழ்ச்சொந்தங்கள் ஓர்மையுடன், ஓரணியில் ஒன்றுதிரண்டு, ராவணப்பெரும்பாட்டனை அவமதிக்கும் கொடுஞ்செயலைத் தடுத்து நிறுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். தங்களது நடவடிக்கை உலகத்தமிழர் உணர்வுகளைச் சீண்டிப்பார்க்கும் தவறான செயல் என்பதை ராவண வதம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உடனடியாக உணர்ந்து, நிகழ்வுப் பணிகளை நிறுத்த வேண்டும். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 88 )

M.COM.N.K.K.
நவ 16, 2024 09:52

பெண்களை இழிவுபடுத்தும் எந்த போக்கிரிராஜாக்களையும் நாம் ஒரு போதும் ஆதரிக்கக்கூடாது.மஹாபாரதத்தில் கர்ணன் நல்லவன் என்பதைக்கூட நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் .காரணம் ஒரு பெண்ணை மானபங்கப்படுத்தும்போது இந்த கர்ணனும் அதை பார்த்து ரசித்துக்கொண்டுதான் இருந்தான் கர்ணன் வள்ளலாக இருக்கலாம் ஆனால் அவனும் சபையில் ஒரு குற்றவாளியே அதுபோல ராவணனும் ஒரு மாபெரும் குற்றவாளியே ஆவான்.


M Ramachandran
நவ 13, 2024 13:04

மாற்றான் மனைவியை அபகரித்தல் முன்னோடி ஒரு மாடு மிரளும் கலர் துண்டு. அயோக்கிய தனத்திற்கு அஞ்சா நெஞ்சினன்கள் இந்த கும்பல். பஞ்சமாகா பாதகங்களை செய்ய அஞ்ச மாட்டார்கள். மாற்றான் நிலம் பொண்டாட்டி செல்வம் அபகரிப்பதில் கில்லாடிகள்.


M Ramachandran
நவ 13, 2024 12:59

பெண்னை கோழை போல் கடத்தி வந்தவன் அவனை அரக்க குணம் கொண்டவன் என்பதில் தவறுயிருப்பதாக தெரியவில்லை. மேலும் தமிழர் நாகரீகத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற வரை வாழ்க்கை முறையில் வாழ்ந்து வந்தனர். ராவணன் பார்க்க குணம் கொண்ட பிராமணன். உஙகளுக்கு தான் பிராமணன் என்றால் வேப்பங்காயாய் கசக்குமே சைய்மன் என்ற நீஙகள் சார்ந்துள்ள உணமை மதத்தை மறைத்து வாழும் சீமான் அவர்களெ.


Kalaiselvan Periasamy
நவ 10, 2024 06:12

சீமான் போன்ற முட்டாள்களை எப்படித்தான் தமிழ் நாட்டினர் சகித்துக் கொள்கிறார்களோ ? இவரின் பேச்சு வந்தேறி டிராவிடனிடம் தமிழர்கள் ஆயுள் அடிமைகளாக உள்ளதையே காண முடிகிறது . உண்மையில் தமிழினம் தமிழ் நாட்டில் உள்ளதா ? அல்லது மற்ற நாடுகளில் குடியேறி விட்டார்களா ? அல்லது அழிந்து விட்டதா ?


sundarsvpr
நவ 02, 2024 17:39

இதிகாச ராவணனை அவமதிக்கக்கூடாது. மாற்றான் மனைவியை கவர்ந்து சென்ற ராவணர்கள் நாட்டில் உள்ளனர் அரசியல் தலைவர்கள் உட்பட அவர்கள் கொடும்பாவியை எரிப்பதில் தவறு இல்லை. இவர்களை சீமான் அவர்களால் களம் காணமுடியும். ஆனால் அவமானத்தை சுட்டிக்காட்டும் தைரியம் இல்லை.


திண்டுக்கல் சரவணன்
அக் 27, 2024 15:12

ராவணனை ஒத்துக்கொண்டால் ராமரையும் ஒத்துக்கொள்ளவேண்டும். அப்படியானால், புராணத்தயும் ஒப்புக்கொண்டு ராவணன் ஒரு வடநாட்டு பிராமணர் என்பதையும் ஒத்துக்கொள்ளவேண்டும். மேலும் தன் சாபம் போக்க, ஜெய-விஜய ஒருவரின் பிறவிதான் இந்த ராவணன். எப்படி திராவிடம் பொய்யோ அதேபோல இனொரு பொய் தான் ராவணன் தமிழர் எனது.


Kamaraj TA
அக் 24, 2024 15:43

இராவணன் உண்மையில் ராமனின் எதிரியே அல்ல. தனது சாபம் நீங்குவதற்காக பக்தர்களாக நூறு முறை பிறவி எடுப்பதை விட கடவுளின் எதிரியாக மூன்று முறை பிறவி எடுப்பதே மேல் என்று எண்ணும்................ விஷ்ணுவின் துவாரபாலகர்களில் ஒருவரே இராவணன்.


W W
அக் 31, 2024 11:38

உங்களின் உண்மையான கரூத்து ஒரு சிலருக்குமட்டுமே தெரியும் .நன்றி வாழ்த்துக்கள் .


muthu
அக் 23, 2024 02:26

Ravanan is a singhalan not a Tamil race . Moreover seeman not knowing anything about ravanan, he support ravanan for anti Brahmin votes / periyar votes


Malarvizhi
அக் 22, 2024 17:29

ஐயோ ஐயோ ராவணன் தமிழனே அல்ல பீகாரி. ஒரு பேச்சுக்காக தமிழனாகவே வைத்துக்கொண்டாலும், பிறன் மனைவிக்கு ஆசைப்பட்டவன் பிறன் மனைவியை கள்ளத்தனமாக கவர்ந்த கோழை. நம் வீட்டில் ஒருவன் திருடி விடுகிறான் என்று வைத்துக்கொள்வோம் அவன் ஒரு தமிழன் என்று தெரிய வருகிறது. அவன் தமிழன் என்பதற்காக அவன் மீது போலீசில் புகார் கொடுக்காமல் இருந்துவிடுவோமா? கண்றாவி. சிந்தனை ஏன்தான் இப்படி போகிறதோ?


Minimole P C
அக் 22, 2024 08:01

useless felllow. Here thounds of problems torturing people. Particulary corruption. Against corruption he has done nothing so far. He himself a part of corruption. People shall ignore him.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை