உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எம்.பில்., படிப்புக்கு மீண்டும் அனுமதி

எம்.பில்., படிப்புக்கு மீண்டும் அனுமதி

சென்னை:ரத்து செய்யப்பட்ட எம்.பில்., படிப்பில், இரு பாடப்பிரிவுகளுக்கு மட்டும், இரண்டு ஆண்டுகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு செல்ல, பிஎச்.டி., போன்றே, எம்.பில்., படிப்பையும் படித்து வந்தனர். ஆனால், எம்.பில்., படிப்பு உரிய தரத்தில் இல்லை என்று கூறி, புதிய கல்வி கொள்கையில், அந்த படிப்பை ரத்து செய்ய அறிவுறுத்தப்பட்டது.அதன்படி, நாடு முழுதும் 2023 முதல், எம்.பில்., படிப்பில் புதிய மாணவர்களை சேர்க்கக் கூடாது என, மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது. 'அரசு மற்றும் தனியார் பல்கலைகள், கல்லுாரிகளில், எம்.பில்., படிப்பை நடத்த வேண்டாம்; புதிய மாணவர்களையும் சேர்க்க வேண்டாம்' என, பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., அறிவுறுத்தியது.இந்நிலையில், எம்.பில்., படிப்பில், இரு பாடப்பிரிவுகளுக்கு மட்டும், 2025 - 26ம் கல்வி ஆண்டு வரை, மாணவர் சேர்க்கையை நடத்தி கொள்ளலாம் என, யு.ஜி.சி., அறிவித்துஉள்ளது. 'கிளினிக்கல் சைக்காலஜி மற்றும் சைக்யாட்ரிக் சோஷியல் வொர்க்' என்ற, மருத்துவ உளவியல் மற்றும் சமூக பணிகளுக்கான உளவியல் பாடப்பிரிவுகளுக்கு, 2025 - 26ம் கல்வி ஆண்டு வரை மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ