அலுவலகங்களில் அரசியலமைப்பு முகப்புரை வாசிப்பு
சென்னை:இந்திய அரசியலமைப்பு சட்டத்தின், 75ம் ஆண்டு தினத்தையொட்டி, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமை செயலகத்தில், நேற்று இந்திய அரசமைப்பு முகப்புரை வாசிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தலைமைச் செயலர் முருகானந்தம் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். இதேபோல், மாநிலம் முழுதும் பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில், நேற்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரை வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது.தமிழக பா.ஜ., சார்பில், சென்னை தி.நகர் கமலாலயத்தில், அக்கட்சி வழக்கறிஞர்கள், அம்பேத்கர் படத்திற்கு மலர்துாவி அஞ்சலி செலுத்தினர்.