உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயார்: ரூ.ஆயிரம் கோடி முறைகேடு புகாருக்கு செந்தில்பாலாஜி பதில்

சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயார்: ரூ.ஆயிரம் கோடி முறைகேடு புகாருக்கு செந்தில்பாலாஜி பதில்

சென்னை: டாஸ்மாக் நிறுவனம் மீது அமலாக்கத்துறை கூறி உள்ள ரூ.ஆயிரம் கோடி முறைகேடு புகாரை, 'சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். டாஸ்மாக் நிறுவனத்தின் டெண்டரில் எந்த முறைகேடும் நடக்கவில்லை ' என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jgw98tm5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பேட்டி: மும்மொழி கொள்ளை, தொகுதி மறுசீரமைப்பு என்ற போர்வையில் மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்க கூடிய மத்திய அரசின் மூக முடியை தோலுரித்து காட்டும் வகையில் முதல்வர் எடுத்திருக்கும் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத மத்திய அரசு, அமலாக்கத்துறையை ஏவி டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தி இருக்கிறார்கள்.டாஸ்மாக் நிறுவனத்தில் தவறுகள் நடந்தது போல் தோற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள். வெளிப்படை தன்மையோடு கொடுக்கப்பட்ட டெண்டரில், எந்த விதமான முறைகேடுகளுக்கும் இடமில்லை. அவர்கள் சொல்லியிருக்கும் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு எந்த அடிப்படையில், எந்த முகாந்திரமும், பொத்தம் பொதுவாக சொல்லியிருக்கிறார். இந்த ஆயிரம் கோடி ரூபாய் என்பதை முன்னதாக ஒருவர் சொல்கிறார். அவர் யார் என்பது உங்களுக்கு தெரியும்.பின்னர் அமலாக்கத்துறை ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு என்று அறிக்கையில் கூறியுள்ளது. இதில் ஆயிரம் அர்த்தங்கள் அடங்கி இருக்கிறது. இது மக்களுக்கு நன்றாக தெரியும். அமலாக்கத்துறை சோதனையை சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். இந்த நிறுவனம் வெளிப்படை தன்மையோடு இயங்கி வருகிறது. எதிர்க்கட்சி தலைவர் சினிமா படத்தில் வருவது போல ஒரு நேரம், ரூஆயிரம் கோடி, மற்றொரு நேரம் ரூ40 ஆயிரம் கோடி என்கிறார். டாஸ்மாக் டெண்டரில் எந்த முறைகேடும் இல்லை. யாருக்கும் கொள்முதலில் சலுகைகள் காட்டப்படவில்லை. எந்த விதமான தவறும் டாஸ்மாக் நிறுவனத்தில் நடக்கவில்லை. இன்று பட்ஜெட்டில் சிறப்பு திட்டங்களை மக்களிடம் மறைக்க, நேற்று அவசரமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். இவ்வாறு செந்தில் பாலாஜி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Tetra
மார் 16, 2025 19:52

கவலையில்லை. எங்களுக்கு கபிலும், அபிஷேக்கும் இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தை‌ இரவிலும் கதவு தட்டி நியாயத்தை கேட்டு வாங்குவார்கள்


தமிழன்
மார் 14, 2025 23:52

இதில் இவனுகளுக்கு மட்டும் பங்கு இல்லை இது எடப்பாடி கும்பலுக்கும் தொடர்பு உள்ளது இது காலம் காலமாக நடந்து வரும் மெகா ஊழல் இதில் கிட்டத்தட்ட 50000 கோடியை தின்று ஏப்பம் விட்டிருப்பானுகள் ஊழல் பெருச்சாளிகள் , அதிகாரிகளையும் நோண்ட வேண்டும் இதில் 2 கேடுகெட்ட திருட்டு கும்பலும் சம்பந்தப்பட்டது இ.டியின் நேர்மை தூய்மை கத்தரிக்காய் எல்லாம் நாடறியும் அப்படி இந்த திருட்டு கும்பலை மட்டுமே குறி வைத்தால், அது அடுத்த வருட தேர்தலுக்கு சுடலை & கோ வுக்கு விரித்த சங்கிகளின் வலை சங்கிகளும் திருட்டு எடப்பாடி & கோ வும் கூட்டணிக்கு தயாராகிவிட்டானுகள் என்று அர்த்தம் மாறாக 2 திருட்டு கும்பலையும் கைது செய்தால் சங்கிகளை பாராட்டலாம் பார்ப்போம் என்ன நடக்கிறது என்று இதில்தான் நம் 2 திருட்டு முன்னேற்ற கழகங்களின் தலைகளும் கூட்டு சேர்ந்து இதை ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுவார்கள்


Tetra
மார் 16, 2025 19:48

உங்கள் விருப்பம் நிறைவேறாது. தமிழகத்தில் போலி போராளிகள் ஏராளம். எலும்பு நூல்களுக்கு அப்பாவி மக்களை பலி கொடுப்பார்கள். ஆதலால் எந்த மத்திய அரசும்‌ தயங்கும்


Iyer
மார் 14, 2025 20:31

செந்தில் பாலாஜி அவர்களுக்கு - நமது நீதித்துறையின் "ஊழல் தன்மையிலும்" , "திறமையற்ற செயல்திறன்" மீதும் மிகுந்த நம்பிக்கை உண்டு. அதனால்தான் சட்டரீதியாக சந்திப்போம் என்று மார் தட்டுகிறார். மோதி அவர்கள் அடுத்த பெரும் நடவடிக்கையாக நீதித்துறையில் மாற்றங்கள் கொண்டுவந்து அரசியல் ஊழல் பெருச்சாளிகள சட்ட்டத்தில் உள்ள ஓட்டைகளை தவறாக பயன்படுத்துவதை தடுக்கவேண்டும்


Ramesh Sargam
மார் 14, 2025 20:24

சட்டரீதியாக தோற்றுவிட்டால் பிறகு என்ன செய்வதாக உத்தேசம்? போராட்டத்தில் இறங்குவீர்களா, அல்லக்கைகளை சேர்த்துக்கொண்டு?


Varadarajan Nagarajan
மார் 14, 2025 19:13

டாஸ்மாக் ஒரு பத்தரைமாத்து தங்க கம்பெனி. அதில் எல்லாமே வெளிப்படைதான். அதில் ஊழலே நடக்கவில்லை. சி ஏ ஜி க்கு கணக்கே தெரியாதோ அதுபோல அமலாக்கத்துறைக்கும் கணக்கே சரியாக தெரியவில்லை. அடுத்த தேர்தல் வரும்போது கொடுக்கவேண்டியதை கொடுத்தால் இதெல்லாம் பொதுமக்களுக்கும் தெரியாது.


என்றும் இந்தியன்
மார் 14, 2025 18:10

ரூ 1000 கோடி ஊழல் தவறு தவறு தவறு. ஏன் ???? திமுக அவ்வளவு கேவலமானது அல்லவே அல்ல. வருடவருமானம் டாஸ்மாக்கில் ரூ 50,000 கோடி வெறும்20% கமிஷனென்றாலும் ரூ 10,000 கோடி ஊழல் தான் சரியானது, ஆகவே இந்த 4 வருடத்தில் ரூ 40,000 கோடி ஊழல் தான் சரியான வார்த்தை.


saravan
மார் 14, 2025 18:09

இதுதாண்டா திராவிட மாடல்... இதுதாண்டா திராவிட மாடல்... விளங்கிடும்...


மாலா
மார் 14, 2025 17:22

சட்டரீதியான தான் ஒரு இருபது வருசம் ஓட்டிடலாம் பின்பு இயற்கை ...... முடிந்தது


ravi subramanian
மார் 14, 2025 16:55

At least this time he should be put in Tihar jail.


Tetra
மார் 16, 2025 19:55

You are very greedy and expect tpp much.


S Sivakumar
மார் 14, 2025 16:54

ஏன் இந்த நிலை யோசிக்காமல் "சட்டம் என் கையில்" என்ற நினைப்பு சட்ட ரீதியாக சந்திக்க தயார் என சவால் விடும் தோரணை நல்லாட்சிக்கு அழகல்ல.