உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆயிரம் கோடி வருத்தம்; ஆறுதலுக்கு ஒரு விருது: ஜெகத்ரட்சகன் விவகாரத்தில் ஜெகஜ்ஜால அரசியல்

ஆயிரம் கோடி வருத்தம்; ஆறுதலுக்கு ஒரு விருது: ஜெகத்ரட்சகன் விவகாரத்தில் ஜெகஜ்ஜால அரசியல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அமலாக்கத்துறையின் ரெய்டு, ரூ.908 கோடி அபராதம், ரூ.89 கோடி சொத்து பறிமுதல் என சோகத்தில் இருந்த ஜெகத்ரட்சகனை குஷிப்படுத்தும் வகையில் தி.மு.க., தலைமை விருது அறிவித்துள்ளது.

தொடர் சர்ச்சை

தி.மு.க.வில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தொடர் சர்ச்சைகளில் சிக்கியவர் என்றால் ஜெகத்ரட்சகனை சொல்லலாம். மதுபான ஆலைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என இவரது தொழில் சாம்ராஜ்ஜியத்தின் எல்லைகள் அதிகம். உள்ளூர், அண்டை மாநிலம் கடந்து அயல்நாடுகளிலும் இவரது தொழில் முதலீடுகளும் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது உண்டு.

ரூ.908கோடி அபராதம்

கடந்த 2020ம் ஆண்டு ஜெகத்ரட்சகனுக்குச் சொந்த இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி காட்டியது. ரெய்டின் போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர் சொத்து முடக்கம் என்று நடவடிக்கை வேறு திசையில் பயணிக்க, கடைசியில் அந்நியச் செலாவணி மேலாண் சட்ட மீறல் என்ற புள்ளியில் ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

அதிர்ச்சி

என்னது... அபராதம் மட்டுமே ரூ.908 கோடியா என்று தி.மு.க.,வில் மட்டுமல்ல, மற்ற கட்சியினரும் 'ஜெர்க்' ஆகித்தான் போயினர். அது மட்டுமின்றி 89 கோடி ரூபாய் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதாகவும் அமலாக்கத்துறை அறிவித்தது.கட்சி தலைமைக்கு மிக நெருக்கமான ஜெகத்ரட்சகனுக்கு உள்ள சொத்து மதிப்பில் இதெல்லாம் தம்பிடி காசு என்று கருத்துகள் பரவலாக பேசப்பட்டன. ஆனால் ஜெகத்தின் தரப்பில் இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை அளித்திருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

மனப்புழுக்கம்

இவ்வளவு தூரம் ரெய்டு, அபராதம் என தம்மைச் சுற்றி நடக்கும் அரசியல் நெருக்கடிகள், சவால்களை கட்சி தலைமை கண்டு கொள்ளவில்லை என்று ஜெகத்ரட்சகன் மனம் புழுங்கி வருத்தத்தில் உள்ளார் என ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். கட்சியில் வலுவானவர், பெரும் தொழிலதிபர் அவரின் நிலையே இப்படியா என்றும் பேச்சுகள் எழுந்ததாக தெரிகிறது.

விருது அறிவிப்பு

கட்சித் தலைமையின் பாராமுகம் காரணமாக, மிகுந்த மன வருத்தத்தில் இருந்தது குறித்து பல்வேறு கட்டங்களில் கட்சியின் மேலிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தி.மு.க., பவள விழா ஆண்டு முப்பெரும் விழாவை ஒட்டி ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகளுக்கு தேர்வானவர்களின் பட்டியலில் ஜெகத்ரட்சகன் பெயரும் டிக் செய்யப்பட்டு உள்ளது.

கட்சி தலைமை

ஜெகத்ரட்சகனுக்கு கலைஞர் விருது வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. அவரது மன வருத்தம் அறிந்து, ஆறுதல் தரும் வகையில் தலைமை இதை செய்திருப்பதாக கூறுகின்றனர், கட்சி பிரமுகர்கள்.

அரசியல் களம்

கட்சித்தலைமை ஆதரவாக உள்ளது என்பதை வெளிக்காட்டவும், என்ன சூழ்நிலையிலும் கட்சி துணை நிற்கும் என்பதை சொல்லாமல் சொல்லவும் தான் இந்த அறிவிப்பு என கட்சியின் பல்ஸ் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு விருது ஜெகத்தின் மன உளைச்சல், அதிருப்தி, சோகத்தை சரி செய்யுமா என்பதே தி.மு.க.,வினரின் முன் இருக்கும் கேள்வியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

adalarasan
செப் 04, 2024 22:19

2026தேர்தல் வருதே ...பணம் பணம்,,,


அப்பாவி
செப் 02, 2024 07:24

அந்த ஆழ்வார்கள் இவரை காப்பாத்திடுவாங்க. கொள்ளை அடிச்ச பணத்தில் ஒரு பர்சண்ட்டை ஆழ்வார்கள் ஆராய்ச்சி மையத்துக்கு குடுத்த ரட்சகராச்சே.


Ramesh Sargam
செப் 01, 2024 21:57

என்னது... அபராதம் மட்டுமே ரூ.908 கோடியா? அப்படி என்றால் அதைவிட பலமடங்கு ஊழல் செய்திருப்பான் அவன். கொடுமை என்னவென்றால், அந்த அளவுக்கு ஊழல் செய்தவனுக்கு விருது வழங்குகிறது கட்சி. ஆமாம், போதைப்பொருள் கடத்தலில் முக்கிய பங்கு உள்ள ஜாபர் சாதிக்குக்கே காவல்துறை அதிகாரியின் மூலம் விருது வழங்கியவர்களாயிற்றே இந்த திமுக.


theruvasagan
செப் 01, 2024 20:46

இன்னொரு முட்டுசந்து யுனஸ்கோ விருது. தனக்குத்தானே மெடல் குத்திக்கிறதில் கில்லாடிங்க.


raja
செப் 01, 2024 20:30

சரியான விருது...பிணவறையில் பணத்தை பதுக்கி வைத்து கொள்ளை அடித்தவருக்கு சர்க்கரையை எறும்பு தின்றது என்று கொள்ளை அடித்தவரின் பெயரில் விருது...சூப்பர் மாடல்..


Sivagiri
செப் 01, 2024 19:52

தட்டி கேட்க ஆளில்லேன்னா தம்பி சண்ட ப்ரசண்டன் -


GMM
செப் 01, 2024 17:44

திராவிட ஊழல் தூண்களை மத்திய விசாரணை அமைப்புகள் வலுவிழக்க செய்தால் போதும். திராவிடம் தானே வீழிச்சி அடையும். தமிழகத்தில் பல லட்சம் கோடி பணம் திராவிடரிடம் சிக்கியுள்ளது? தற்போதைய தேர்தல் முறையில் மம்தா, திமுக, கெஜ்ரிவால், விஜயன் போன்றோரை அகறுவது கடினம். ஊழல் வலையில் சிக்கி தவித்தால் புதிய சிறந்த தலைமுறை உருவாகும்.


xyzabc
செப் 01, 2024 17:41

வூழல் நாயகன்களுக்கே கலைஞர் விருது கொடுக்கப்படும்.


Sivaswamy Somasundaram
செப் 01, 2024 16:59

“ஆயிரம் இருந்தும் ,வசதிகள் இருந்தும்”


D.Ambujavalli
செப் 01, 2024 16:42

சாராய ஆளை , கல்வி நிறுவனங்கள், தொட்டுக்கொள்ள 'ஆழ்வார்கள் ' என்று வாரிவாரி சம்பாதித்து தேர்தல்களில் sponsor செய்த 'வள்ளலுக்கு' இதுகூட செய்ய வேண்டாமா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை